விவசாயிகள் குழுக்கள் அமைக்கும் பணியை விரைவுபடுத்த அறிவுரை

தருமபுரி மாவட்டத்தில் விவசாயிகள் குழுக்கள் அமைக்கும் பணியை விரைவுபடுத்த வேண்டும் என வேளாண் துறை இயக்குநர் ஆர்.தட்சிணாமூர்த்தி அறிவுறுத்தினார்.

தருமபுரி மாவட்டத்தில் விவசாயிகள் குழுக்கள் அமைக்கும் பணியை விரைவுபடுத்த வேண்டும் என வேளாண் துறை இயக்குநர் ஆர்.தட்சிணாமூர்த்தி அறிவுறுத்தினார்.
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வேளாண் துறைப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற அவர் மேலும் பேசியது:
தமிழ்நாடு முழுவதும் தலா 20 பேரைக் கொண்ட விவசாய ஆர்வலர் குழுக்களை உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்தக் குழுக்களை ஒருங்கிணைத்து தலா 100 பேரைக் கொண்ட விவசாய உற்பத்தியாளர் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும்.
இந்தக் குழுக்கள் மூலம் விதை, இடுபொருள்கள் உள்ளிட்டவற்றை மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்க ரூ.5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விவசாய உற்பத்திப் பொருள்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்ய கூட்டுப் பண்ணைத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
தற்போது விவசாய ஆர்வலர் குழுக்களை உருவாக்கும் தொடக்க நிலைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மாவட்டம் முழுவதும் இந்தக் குழுக்களை விரைவுபடுத்த வேண்டும். இந்தக் குழுக்களுக்கு ஆட்சியரின் ஒப்புதலும் பெற வேண்டும் என்றார் தட்சிணாமூர்த்தி.
கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியர் கே,விவேகானந்தன் தலைமை வகித்தார். மாவட்ட வேளாண் இணை இயக்குநர் ஆர்.ஆர்.சுசீலா, மாவட்ட வருவாய் அலுவலர் அ.சங்கர் உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலர்களும் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com