பலவகை தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர் பணிக்கு எழுத்துத் தேர்வு: தருமபுரியில் 4331 பேர் எழுதினர்

பலவகை தொழில்நுட்பக் கல்லூரி (பாலிடெக்னிக்) விரிவுரையாளர் பணியிடத்துக்கு சனிக்கிழமை நடைபெற்ற தேர்வை தருமபுரியில் 4331 பேர் எழுதினர்.

பலவகை தொழில்நுட்பக் கல்லூரி (பாலிடெக்னிக்) விரிவுரையாளர் பணியிடத்துக்கு சனிக்கிழமை நடைபெற்ற தேர்வை தருமபுரியில் 4331 பேர் எழுதினர்.
ஆசிரியர் தேர்வு வாரியத்தால், அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் விரிவுரையாளர்கள் பணியிடங்களுக்கான நேரடி எழுத்துத் தேர்வு தருமபுரியில் நடைபெற்றது. தருமபுரி தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தேர்வை மையத்தை ஆட்சியர் கே.விவேகானந்தன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது, செய்தியாளர்களிடம் அவர் கூறியது: அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் விரிவுரையாளர்கள் பணியிடங்களுக்கான நேரடி எழுத்து தேர்வை தருமபுரி மாவட்டத்தில் 5054 பேர் எழுத அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதில், 4331 பேர் எழுதியுள்ளனர்.
இத்தேர்வுக்காக, தருமபுரி மாவட்டத்தில் 14 பள்ளிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. தேர்வுப் பணியில் 14 முதன்மைக் கண்காணிப்பாளர்கள், 14 கூடுதல் முதன்மைக் கண்காணிப்பாளர்கள், 14 துறை அலுவலர்கள், 14 கூடுதல் துறை அலுவலர்கள் மற்றும் உடல் பாதுகாப்புப் பரிசோதனை பணியில் 56 ஆசிரியாகள் மற்றும் 28 காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டனர் என்றார்.
இதேபோல பள்ளிக் கல்வி (தொழில் கல்வி) இணை இயக்குநர் சுகன்யா, பாப்பாரப்பட்டி, காரிமங்கலம் ஆகிய இடங்களில் நடைபெற்ற தேர்வு மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பண்டி கங்காதர், கோட்டாட்சியர் ராமமூர்த்தி, முதன்மைக் கல்வி அலுவலர் மு.ராமசாமி, மாவட்ட கல்வி அலுவலர் சபியுல்லாகான், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் பழனிசாமி ஆகியோரும் ஆய்வு பணியில் ஈடுபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com