மத்தூர் அருகே8,225 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

மத்தூர் அருகே தோட்டத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 8,225 லிட்டர் எரிசாராயத்தை மத்தூர் போலீஸார் சனிக்கிழமை பறிமுதல் செய்தனர்.

மத்தூர் அருகே தோட்டத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 8,225 லிட்டர் எரிசாராயத்தை மத்தூர் போலீஸார் சனிக்கிழமை பறிமுதல் செய்தனர்.
மத்தூர் அருகேயுள்ள ஜிஞ்சம்பட்டி-ஆம்பள்ளி சாலையில் சென்ற இரு சக்கர வாகனத்தை மத்தூர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பார்த்திபன், ஊர்க்காவல் படை காவலர் பிரசாந்த் ஆகிய இருவரும் பின்தொடர்ந்து சென்றனர். ராம் நகருக்குச் சென்றபோது, வாகனத்தில் சென்றவர்கள் போலீஸார் பின்தொடர்வதை அறிந்து தப்பிக்க முயன்றனர்.
ஆனால், அவர்களை விரட்டிச் சென்றபோது, வேலூர் மாவட்டம், நாற்றம்பள்ளி அடுத்த குலான் ஏரி கிராமத்தை சேர்ந்த ஆனந்தனின் தோட்டத்தில் 50 கேன்களில் நிரப்பப்பட்ட எரிசாராய கேன்கள் இருந்தன.
மேலும், தோட்டத்தில் இருந்த வீட்டில் சோதனை செய்ததில், எரிசாராய கேன்கள் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, மொத்தம் 235 கேன்களில் இருந்த 8225 லிட்டர் எரிசாராயத்தை பறிமுதல் செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மகேஷ்குமார் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு, எரிசாராயத்தை பறிமுதல் செய்து சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்ய உத்தரவிட்டார்.
ஊத்தங்ககரை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளர் ஆறுமுகம் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com