காட்டுப்பன்றி வேட்டை:  ரூ.10 ஆயிரம் அபராதம்

பாலக்கோடு அருகே காட்டுப் பன்றியை வேட்டையாடியவருக்கு, வனத்துறையினர் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

பாலக்கோடு அருகே காட்டுப் பன்றியை வேட்டையாடியவருக்கு, வனத்துறையினர் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
தருமபுரி வனக்கோட்டம், பாலக்கோடு வனச்சரகம், எர்ரனஹள்ளி காப்புக்காட்டில் வனச்சரகர் சி.செல்வம் தலைமையில் வனவர் வி.வெங்கடேசன், வனக் காப்பாளர்கள் கே.சங்கர், சண்முகம் உள்ளிட்டோர் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது, பிக்கனஹள்ளி சரகப் பகுதியில், வாழைத்தோட்டம் கிராமத்தைச் சேர்ந்த ம.சின்னசாமி என்பவர், காட்டுப் பன்றியை வேட்டையாடியது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, அவர் மீது, வனப் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து, வனவிலங்கை வேட்டையாடியதற்காக, தமிழ்நாடு வனச்சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், அந்தத் தொகையை வசூலித்து அரசு கணக்கில் செலுத்தினர்.  
மேலும், காப்புக் காடுகளில் வன விலங்குகளை வேட்டையாடுவோர் மீது, வனச்சட்டம் மற்றும் வனப்பாதுகாப்பு சட்டங்களின்படி கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com