பாப்பிரெட்டிப்பட்டியில் சம்ஸ்கிருத சிறப்பு பயிற்சி

பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், சாமியாபுரம் கூட்டுச் சாலையில் சம்ஸ்கிருத  சிறப்பு பயிற்சி வகுப்புகள் வியாழக்கிழமை நிறைவடைந்தன.

பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், சாமியாபுரம் கூட்டுச் சாலையில் சம்ஸ்கிருத  சிறப்பு பயிற்சி வகுப்புகள் வியாழக்கிழமை நிறைவடைந்தன.
 சென்னை ஸம்ஸ்க்ருத பாரதி சார்பில் நடைபெற்ற இந்த பயிற்சி முகாமினை அதன் ஒருங்கிணைப்பாளர் விஜயலட்சுமி தொடக்கி வைத்தார்.
பள்ளி மாணவர்கள் சமஸ்கிருதத்தில் பேசுதல், எழுதுதல், மேடைப் பேச்சு, நாடகம், விளையாட்டு முறைகள், சமஸ்கிருதம் கற்கும் முறைகள், அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்து பேராசிரியர் நரசிம்மன், பயிற்றுநர்கள் கணபதி, கார்த்திக், சங்கர் தாஸ் உள்ளிட்டோர் பயிற்சி அளித்தனர்.
6 தினங்கள் நடைபெற்ற இந்த சிறப்பு பயிற்சி முகாமில், பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இந்த பயிற்சி முகாம் நிறைவில், பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுப் பொருள்களை அரூர் திருக்குறள் தமிழ்ச் சங்கத் தலைவர் பொன்னுரங்கன், அறிவு திருக்கோயில் யோகா ஆசிரியர் பாரதி, ஸம்ஸ்க்ருத பாரதியின் தருமபுரி மாவட்டச் செயலர் எஸ்.செம்முனி ஆகியோர் வழங்கினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com