"வேலைவாய்ப்பற்றோருக்கான உதவித்தொகை ரூ.1.47 கோடி வழங்கப்பட்டுள்ளது'

தருமபுரி மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்றோருக்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ், இதுவரை 13,062 பேருக்கு ரூ.1.47 கோடி 

தருமபுரி மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்றோருக்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ், இதுவரை 13,062 பேருக்கு ரூ.1.47 கோடி உதவித்கொகையாக வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கே.விவேகானந்தன் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்தி: தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் சார்பில் பதிவுசெய்துள்ள வேலைவாய்ப்பற்றோருக்கான உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தருமபுரி மாவட்டத்தில் இதுவரை 1.84 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர்.
இத்திட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 9,538 பயனாளிகளுக்கு ரூ.75 லட்சம் மற்றும் 3,524 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.72 லட்சம் என மொத்தம் 13,062 பேருக்கு ரூ.1.47 கோடி வழங்கப்பட்டுள்ளது.
எஸ்எஸ்எல்சி தேர்ச்சி பெறாத 13 பேருக்கு தலா ரூ.200 வீதம் ரூ.7,800, எஸ்எஸ்எல்சி தேர்ச்சி பெற்ற 100 பேருக்கு தலா ரூ.300 வீதம் ரூ.90 000, பிளஸ் 2 தேர்ச்சி மற்றும் அதற்கு சமமான தகுதி பெற்ற 370 பேருக்கு தலா ரூ.400 வீதம் ரூ.4.40 லட்சம், பட்டதாரி மற்றும் முதுநிலை பட்டதாரிகள் 268 பேருக்கு தலா ரூ.600 வீதம் ரூ.4.82 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.
2015-ஆம் ஆண்டு முதல் மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் எஸ்எஸ்எல்சி தேர்ச்சி அல்லது அதற்கு கீழ் படித்த 107 பேருக்கு தலா ரூ.600 வீதம் ரூ.1.92 லட்சம், பிளஸ் 2 தேர்ச்சி அல்லது அதற்கு சமமான தகுதி பெற்ற 115 பேருக்கு தலா ரூ.750 வீதம் ரூ.2.58 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. பட்டதாரிகள் மற்றும் முதுநிலை பட்டதாரிகள் 120 பேருக்கு தலா ரூ.1,000 வீதம் ரூ.3.60 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.
எனவே, வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து பலன்பெறலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com