மானிய உதவியுடன் தோட்டக்கலைப் பயிர்களை சாகுபடி செய்ய அழைப்பு

தருமபுரி மாவட்டத்தில் அரசின் மானிய உதவியுடன் தோட்டக்கலைப் பயிர்களை சாகுபடி செய்திட விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியர் சு.மலர்விழி

தருமபுரி மாவட்டத்தில் அரசின் மானிய உதவியுடன் தோட்டக்கலைப் பயிர்களை சாகுபடி செய்திட விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியர் சு.மலர்விழி அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்தி: குறைந்த நீரில் விவசாயிகள் அதிக வருவாய் ஈட்டக் கூடிய காய்கறிகள், பழப் பயிர்கள், மலர் பயிர்கள், சுவை தானியப் பயிர்கள் மற்றும் மலைத்தோட்டப் பயிர்களை சாகுபடி செய்யலாம். இதில் விருப்பமுள்ள விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த தோட்டக்கலை மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் 40 சதவீதம் அல்லது 50 சதவீத மானியத்தில் அதிகபட்சமாக ஒரு பயனாளிக்கு 4 ஹெக்டேருக்கு மானிய உதவிகள் வழங்கப்படுவதுடன், உயர் சாகுபடி தொழில்நுட்பங்கள் திட்ட விரிவாக்க அலுவலர்கள் மூலம் வழங்கப்படுகிறது. காய்கறி பயிர்கள் சாகுபடி செய்வோருக்கு வீரிய ஒட்டுரக விதைகள் அல்லது குழித்தட்டு நாற்றுகள் மற்றும் இதர இடுபொருள்கள் ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் மதிப்பில் வழங்கப்படுகிறது.
மா மற்றும் கொய்யா பயிர்களில் அடர்நடவு முறையில் சாகுபடி மேற்கொள்ள விரும்புவோருக்கு மா பயிருக்கு ரூ.9,840 மதிப்பிலும், கொய்யாவுக்கு ரூ.17,599 மதிப்பிலும் நடவுச் செடிகள் வழங்கப்படுகின்றன.
திசு வாழைப் பயிர் சாகுபடிக்கு ஹெக்டேருக்கு ரூ.37,500 மதிப்பில் நடவுச் செடிகள் மற்றும் இடுபொருள்களும், பப்பாளி சாகுபடி செய்ய ஹெக்டேருக்கு ரூ.12 ஆயிரம் வீதம் நடவுச் செடிகள் மற்றும் இடுபொருள்களும் வழங்கப்படுகின்றன. மஞ்சள் சுவை தானியப் பயிர்கள் சாகுபடி செய்ய ஹெக்டேருக்கு ரூ.12 ஆயிரம் வீதம் நடவுச் செடிகள் மற்றும் இதர இடுபொருள்களும், ரோஜா, மல்லி மற்றும் சாமந்தி போன்ற உதிரி மலர்கள் சாகுபடி செய்ய ஹெக்டேருக்கு ரூ.16 ஆயிரம் வீதம் நடவுச் செடிகளும், சம்பங்கி, கிளாடியோலஸ் போன்ற கிழங்குவகை மலர்களுக்கு ரூ.60 ஆயிரம் மானியமும் வழங்கப்படுகிறது.
மேலும் விவரங்களை அறிய: தருமபுரி-04342 264266, நல்லம்பள்ளி-04342 244244, பென்னாகரம்-04342 254754, காரிமங்கலம்-04348 241788, பாலக்கோடு-04348 245754, மொரப்பூர்-04346 263339, அரூர்-04346 221122, பாப்பிரெட்டிப்பட்டி-04346 246144.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com