சென்னை-குமரி நெடுஞ்சாலையை மேம்படுத்த வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

சேலம் எட்டுவழிச் சாலைத் திட்டத்துக்கு மாற்றாக சென்னை முதல் கன்னியாகுமரி வரையுள்ள தேசிய நெடுஞ்சாலைகளை அரசு மேம்படுத்த வேண்டும் என தருமபுரி எம்.பி. அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

சேலம் எட்டுவழிச் சாலைத் திட்டத்துக்கு மாற்றாக சென்னை முதல் கன்னியாகுமரி வரையுள்ள தேசிய நெடுஞ்சாலைகளை அரசு மேம்படுத்த வேண்டும் என தருமபுரி எம்.பி. அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், இருளப்பட்டியில் எட்டு வழி பசுமை விரைவுச் சாலை திட்டம் குறித்து பொதுமக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசியது:
வாணியம்பாடி- சேலம் மாநில நெடுஞ்சாலையானது தற்போது தேசிய நெடுஞ்சாலையாக மாற்றப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அரூர் வழியாக சென்னை முதல் சேலம் வரை புதிதாக மேலும் ஒரு தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
நான் பல்வேறு நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளேன். எந்த நாட்டிலும் இதுபோன்று ஒரே பகுதியில் இரண்டு தேசிய நெடுஞ்சாலைகள் இல்லை.
சேலத்தில் இருந்து சென்னைக்குச் செல்வதற்கு 3 நெடுஞ்சாலைகள் உள்ளன.
மேலும் இரண்டு வழித்தடங்களில் ரயில்வே பாதைகள் உள்ளன. இந்தளவுக்கு சாலை வசதிகள் உள்ள சேலத்துக்கு புதிதாக எட்டுவழிச் சாலை திட்டம் தேவையில்லை.
சேலம் அதிக மக்கள்தொகைகளை கொண்ட பெரிய நகரமும் அல்ல. அதாவது, கோவையில் 18 லட்சம் மக்களும், மதுரையில் 15 லட்சம் மக்களும், சேலத்தில் 9 லட்சம் மக்களும் வசிக்கின்றனர். கோவை, மதுரைக்குக்கூட எட்டு வழிச்சாலைகள் அமைக்கப்படவில்லை.
எனவே அரூர் வழியாக சென்னை முதல் சேலம் வரையிலும் அமைக்கப்படும் எட்டு வழி பசுமை விரைவுச் சாலை திட்டத்தை ரத்து செய்துவிட்டு அதற்கு மாற்றாக  மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ள ரூ. 10 ஆயிரம் கோடியில் சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரை உள்ள நெடுஞ்சாலைகளை மேம்படுத்த வேண்டும்.
காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் பசுமை வழிச் சாலையால் பாதிக்கப்படும் விவசாயிகளிடம் கருத்துகளைக் கேட்டு,  இது குறித்து மத்திய, மாநில அரசுகளிடம் அரசியல் ரீதியாக வலியுறுத்தப்படும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com