பசுமை வழிச்சாலைத் திட்டத்தை கைவிடக் கோரி ஆக. 1-இல் நடைப்பயணம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முடிவு

பசுமை வழிச்சாலைத் திட்டத்தை கைவிடக் கோரி ஆகஸ்ட் 1-இல் நடைபெறும் நடைப்பயணத்தில் தருமபுரியில் திரளாகப் பங்கேற்பது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் முடிவெடுக்கப்பட்டது.

பசுமை வழிச்சாலைத் திட்டத்தை கைவிடக் கோரி ஆகஸ்ட் 1-இல் நடைபெறும் நடைப்பயணத்தில் தருமபுரியில் திரளாகப் பங்கேற்பது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் முடிவெடுக்கப்பட்டது.
தருமபுரி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழுக் கூட்டம் செயற்குழு உறுப்பினர் டி.எஸ். ராமச்சந்திரன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே. தங்கவேலு விளக்க உரையாற்றினார். மாவட்டச் செயலர் ஏ. குமார் அறிக்கை சமர்ப்பித்தார்.
கூட்டத்தில்,  சேலம்-சென்னை எட்டு வழி பசுமை சாலை திட்டத்தை கைவிடக் கோரி, வருகிற ஆகஸ்ட் 1-ஆம் தேதி கட்சியின் மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் திருவண்ணாமலை தொடங்கி அரூர் வழியாக சேலம் வரை நடைபெற உள்ள நடைப்பயணத்தில் தருமபுரி மாவட்டத்திலிருந்து திரளாக பங்கேற்பது மற்றும் வருகிற ஆகஸ்ட் 9-ஆம் தேதி விவசாய சங்கங்கள், தொழிற்சங்கங்கள் சார்பில் நடைபெறும் மறியல் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பது, பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள், இரா. சிசுபாலன், கிரைஸா மேரி, சோ. அர்ஜூனன், கே.என்.மல்லையன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com