தமிழ்நாடு 50-ஆம் ஆண்டு பொன்விழா: போட்டிகளில் பங்கேற்க அழைப்பு

தமிழ்நாடு 50-ஆம் ஆண்டு பொன்விழா போட்டிகளில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு 50-ஆம் ஆண்டு பொன்விழா போட்டிகளில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி, தருமபுரி மாவட்டத்தில் கல்லூரி மாணவர்களுக்கு பொன் விழா ஆண்டு போட்டிகள் வரும்  ஜூன் 25-ஆம் தேதி நடைபெறவுள்ளது. கல்லூரி மாணவர்கள் இப்போட்டிகளில் பங்கேற்கலாம் என தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் பொன் விழா ஆண்டு கவிதை, கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடத்தப்படவுள்ளன.  தமிழ் மொழியின் பெருமையை உலகுக்கு எடுத்துரைத்த அண்ணா, பாரதியார், பாரதிதாசன்,  திருவிக, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆகியோரின் படைப்புகளில் இருந்து தலைப்புகள் கொடுக்கப்படும். மாவட்ட அளவில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு ஒவ்வொரு போட்டிக்கும் முதல் பரிசு ரூ.5 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.3 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். மாவட்ட அளவில் வெற்றிபெற்றோர், மாநிலப் போட்டிக்கு அனுப்பி வைக்கப்படுவர்.
போட்டிகளில் பங்கேற்க விரும்பும் கல்லூரி மாணவர்கள் தங்கள் கல்லூரி முதல்வரின் பரிந்துரைக் கடிதத்துடன் நேரில் பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com