ரூ. 56.80 லட்சத்தில் 8 திட்டப் பணிகள் தொடக்கம்

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.56.80 லட்சத்தில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள், நியாய விலைக் கடை, பல்நோக்கு

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.56.80 லட்சத்தில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள், நியாய விலைக் கடை, பல்நோக்கு மையக் கட்டடம் மற்றும் பேருந்து நிலையம் அமைப்பதற்கான பணிகளை வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார் மாநில உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன். 
மகேந்திரமங்கலம் ஊராட்சி பெரிய ஒட்டுப்பட்டியில் ரூ.8.20 லட்சத்தில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, சீங்கேரி கிராமத்தில் ரூ.6.20 லட்சத்தில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, ஆதிதிராவிடர் குடியிருப்பில் ரூ.8.20 லட்சத்தில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, தொறிமலையான் கொட்டாய் கிராமத்தில் ரூ.6.20 லட்சத்தில் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி ஆகியவை அமைக்கப்படவுள்ளன. பிக்கனஅள்ளியில் ரூ.5.50 லட்சத்தில் புதிய நியாய விலைக் கடைக்கான கட்டடம், கண்டகபைல் கிராமத்தில் ரூ. 5.50 லட்சத்தில் புதிய நியாய விலைக் கடைக்கான கட்டடம் ஆகியவையும் கட்டப்படவுள்ளன. மேலும், காரிமங்கலத்தில் ரூ.17 லட்சத்தில் பல்நோக்கு சேவை மையக் கட்டடமும், பேருந்து நிலையமும் அமைக்கப்படவுள்ளன. மொத்தம் ரூ.56.80 லட்சத்தில் 8 திட்டப் பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டன.
மாவட்ட ஆட்சியர் சு.மலர்விழி இந்த நிகழ்ச்சிகளுக்குத் தலைமை வகித்தார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் எம்.காளிதாசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெங்கட்ரமணன், வடிவேல், வட்டாட்சியர் வெங்கடேஸ்வரன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com