மக்களின் தேவைகளை தமிழக அரசு நிறைவேற்றி வருகிறது: அமைச்சர் கே.பி.அன்பழகன்

மக்களின் தேவைகளை அறிந்து அவற்றை தமிழக அரசு நிறைவேற்றி வருவதாக மாநில உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.

மக்களின் தேவைகளை அறிந்து அவற்றை தமிழக அரசு நிறைவேற்றி வருவதாக மாநில உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.
காரிமங்கலம் வட்டாட்சியர் அலுவலத்தில் சனிக்கிழமை நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆட்சியர் சு.மலர்விழி தலைமையில் நடைபெற்றது.
இந்த விழாவில் மாநில உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், முதமைச்சர் நிவாரண நிதி, பேரிடர் நிவாரணநிதி உதவி, வருவாய்த் துறை, சமூக பாதுகாப்புத்திட்டம், மகளிர் திட்டம் உள்ளிட்ட திட்டங்களின் சார்பில் 570 பயனாளிகளுக்கு சுமார் ரூ. 2 கோடியே 17 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை வழங்கி பேசியது: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் அனைத்தும் தற்போதைய ஆட்சியில் சிறப்பாக தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. தருமபுரி மாவட்டத்தில் உயர்கல்வி பயிலும் பெண்கள் ஆர்வத்துடன் பயின்று வருகின்றனர்.
கடந்தாண்டு தருமபுரி மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் வெற்றி பெற்று உயர்கல்விக்கு 96.82 சதவீதம் பேர் சென்றுள்ளனர். காரிமங்கலம் பகுதியில் புதிதாக ஒரு பெண்கள் கலை அறிவியியல் கல்லூரி தொடங்கப்பட்டு, அதில் அனைத்து பாடப்பிரிவுகளும் தொடங்கப்பட்டுள்ளது.
கிராமப்புறங்களில் உள்ளவர்கள் அனைத்து வசதிகளையும் பெற வேண்டும் என்ற நோக்கில் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. மக்களின் தேவைகளைக் கண்டறிந்து அதை நிறைவேற்றும் அரசாக தமிழக அரசு செயல்பட்டு வருகிறது என்றார். விழாவில் கோட்டாட்சியர் க. ராமமூர்த்தி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் காளிதாசன், உதவி ஆணையர் தொழிலாளர் நலத் துறை இந்தியா, அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com