பாரத மாதா ஆலயத்தை அருங்காட்சியகமாக அமைக்க வேண்டுகோள்

பாப்பாரப்பட்டியில் அமையவுள்ள பாரதமாதா ஆலயத்தை, வரலாற்று அருங்காட்சியகமாக அமைக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. 

பாப்பாரப்பட்டியில் அமையவுள்ள பாரதமாதா ஆலயத்தை, வரலாற்று அருங்காட்சியகமாக அமைக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. 
இது குறித்து, அக் கட்சியின் தருமபுரி மாவட்டச் செயலர் ஏ.குமார் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்தியறிக்கை: விடுதலை போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவா, தனது இறுதிக் காலத்தில் தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில் பாரதமாதா ஆலயம் அமைக்க பெருமுயற்சி மேற்கொண்டார்.
இந்த ஆலயம் எந்த மதத்தையும் சார்ந்ததல்ல, சகல மதத்தினருக்கும் சொந்தமானது  என அப்போதே அவர் துண்டறிக்கையும் வெளியிட்டிருந்தார். ஆனால், கடந்த 1925-இல் அவரது மறைவால், இந்த முயற்சி தடைப்பட்டு போனது. இருப்பினும், சிவாவின் கனவு நிறைவேற்ற தியாகி பஞ்சாட்சரம், காங்கிரஸ் மூத்தத் தலைவர் குமரி அனந்தன் ஆகியோர் தொடர்ந்து குரல் எழுப்பி வந்தனர். மேலும், கம்யூனிஸ்ட் கட்சியினர் தொடர்ந்து தியாகி சிவாவின் புகழை பரப்பி வருகின்றனர். இந்த நிலையில், அவரது கொள்கைக்கு எதிராக, இந்த ஆலயத்தை ஒரு சிலர், மத அடையாளமாக மாற்ற முயற்சிக்கின்றனர்.
 எனவே, தமிழக அரசு அறிவித்துள்ள பாரதமாதா ஆலயத்தை , விடுதலை போராட்ட வரலாற்றை விளக்கும் வகையில், சுப்பிரமணிய சிவாவின் கடிதங்கள், நூல்கள், அரிய புகைப்படங்கள், கல்வெட்டுகள், நினைவுச் சின்னங்கள், நூலகம், படக்காட்சி ஆகியவை உள்ளடக்கிய வரலாற்றை இன்றைய தலைமுறையினர் அறிந்து கொள்ள ஏதுவாக வரலாற்று அருங்காட்சியமாக அமைக்க வேண்டும். இதற்காக நிதியை ரூ. 5 கோடியாக அதிகரித்து ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com