பேளாரஅள்ளியில் தார்ச்சாலை அமைக்கும் பணி தொடக்கம்

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே புதிய தார்ச்சாலை அமைக்கும் பணியை மாநில உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் திங்கள்கிழமை தொடக்கி வைத்தார்.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே புதிய தார்ச்சாலை அமைக்கும் பணியை மாநில உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் திங்கள்கிழமை தொடக்கி வைத்தார்.
பேளாரஅள்ளியில் ரூ.31.50 லட்சம் மதிப்பில் கால்நடை மருந்தகம்,  ரூ.70.16 லட்சம் மதிப்பில் அ.மல்லாபுரம் ஊராட்சி வட்டுகானம்பட்டி முதல் ரங்கம்பட்டி வரை 1.965 கி.மீ தொலைவுக்கு தார்ச்சாலை அமைக்கும் பணியை மாநில உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தொடக்கி வைத்து பேசியது:
தருமபுரி மாவட்டத்தில் நபார்டு திட்டம் 23-இன் கீழ், 18 சாலைப் பணிகள் ரூ.9.60 கோடி மதிப்பில் 28.9 கி.மீ. தூரம் அமைக்க ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. அதேபோல, தற்போது தொடங்கப்பட்டுள்ள கால்நடை மருந்தகம் கட்டும் பணி உள்ளிட்ட பணிகள் வருகிற 6 மாத காலத்துக்குள் நிறைவுபெற்று மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்றார்.
ஆட்சியர் சு.மலர்விழி தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், கோட்டாட்சியர் க.ராமமூர்த்தி,  பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் தியாகராஜன்,  கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநர் வேடியப்பன்,  வட்டாட்சியர் அருண்பிரசாத், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தனபால், ராமஜெயம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com