3 இடங்களில் கால்நடை கிளை மருந்தகங்கள் திறப்பு

தருமபுரி மாவட்டம் திப்பிரெட்டிஅள்ளி, ஆலாபுரம் மற்றும் எச். புதுப்பட்டி ஆகிய இடங்களில் கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் புதிய கால்நடை

தருமபுரி மாவட்டம் திப்பிரெட்டிஅள்ளி, ஆலாபுரம் மற்றும் எச். புதுப்பட்டி ஆகிய இடங்களில் கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் புதிய கால்நடை கிளை மருந்தகங்களை மாநில உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்தார்.
திப்பிரெட்டிஅள்ளி கால்நடை கிளை நிலையத்தை திப்பரெட்டிஅள்ளி, பசுவாபுரம், சுரக்காப்பட்டி, தாளப்பள்ளம், அம்மாபாளையம், ராமதாஸ் நகர், பத்திரெட்டிஅள்ளி, குழந்தைகவுண்டன்கொட்டாய், கந்தகவுண்டன் கொட்டாய், நத்தமேடு, குக்கல்மலை, காமராஜ் நகர், சந்தனூர் மேடு, மணிப்புரம், ராமநாதபுரம் மற்றும் கொப்பிடக்கரை ஆகிய 16 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தாங்கள் வளர்க்கும் சுமார் 7035-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்குப் பயன்படுத்திக்
கொள்ளலாம்.
பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் ஆலாபுரம் கால்நடை கிளை நிலையத்தை மருக்காலம்பட்டி, ஆ. நடூர், அம்மாபாளையம், ஜில்லாநகர், நேருநகர், பாஞ்சாலிநகர், பெருமாபாளையம், பாலக்காடு ஆகிய 8 கிராமத்தைச் சேர்ந்த மக்கள், தாங்கள் வளர்க்கும் சுமார் 4050 கால்நடைகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் எச். புதுப்பட்டி கால்நடை கிளை நிலையத்தை எச். புதுப்பட்டி, ஜாலிக்காடு, ஒட்டக்காடு, பாப்பம்பாடி, அண்ணாநகர், காந்திநகர், தொட்டிக்கல் காளிபுரம், மூக்காரெட்டிப்பட்டி, காமராஜ் மற்றும் பாரதி நகர் ஆகிய 12 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தாங்கள் வளர்க்கும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கால்நடைகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
திறப்பு விழாக்களுக்கு மாவட்ட ஆட்சியர் சு. மலர்விழி தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் அ. சங்கர், வருவாய்க் கோட்டாட்சியர்கள் ராமமூர்த்தி, பத்மாவதி, முன்னாள் மாவட்ட ஊராட்சித் தலைவர் டி.ஆர். அன்பழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com