2,062 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கல்

தருமபுரி மாவட்டத்தில், பாலக்கோடு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு உள்பட்ட 8 அரசு மேல்நிலைப் பள்ளிகளில்

தருமபுரி மாவட்டத்தில், பாலக்கோடு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு உள்பட்ட 8 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 2,062 மாணவ, மாணவியருக்கு ரூ.76.44 லட்சத்தில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை மாநில உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வெள்ளிக்கிழமை
வழங்கினார்.
காரிமங்கலம் வட்டம், பந்தாரஅள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் 143 மாணவ, மாணவியருக்கும், கன்னிப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 144 பேருக்கும், மாட்லாம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 219 பேருக்கும், பெரியாம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 332 பேருக்கும், பொன்னேரி மாதிரிப் பள்ளியில் 105 பேருக்கும், பேகாரஅள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் 311 பேருக்கும், பாலக்கோடு வட்டம் திருமல்வாடி மேல்நிலைப் பள்ளியில் 389 பேருக்கும், மாரண்டஅள்ளி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 408 பேருக்கும் இந்த விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிகளுக்கு, மாவட்டக் கல்வி அலுவலர் உஷாராணி தலைமை வகித்தார். முதன்மைக் கல்வி அலுவலர் மு.ராமசாமி, முன்னாள் மாவட்ட ஊராட்சித் தலைவர் தொ.மு.நாகராசன், பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலைத் தலைவர் கே.வி.அரங்கநாதன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com