வேலை வழங்குவதாக பண மோசடி: போலீஸார் விசாரணை

அரூரில் தனியார் நிறுவனத்தில் வேலை வழங்குவதாக இளைஞர்களிடம் பணம் மோசடி செய்திருப்பது

அரூரில் தனியார் நிறுவனத்தில் வேலை வழங்குவதாக இளைஞர்களிடம் பணம் மோசடி செய்திருப்பது தொடர்பாக போலீஸார் வெள்ளிக்கிழமை விசாரணை மேற்கொண்டனர்.
அரூர் கச்சேரிமேடு சாலை சந்திப்பில் கடந்த 4 மாதங்களாக தனியார் வேலைவாய்ப்பு அலுவலகம் இயங்கி வந்தது. இந்த அலுவலகத்தில் உறுப்பினராக சேர ஒருவர் ரூ.8 ஆயிரம் செலுத்த
வேண்டும். 
பிறகு, அந்த நபர் மேலும் 2 நபர்களை உறுப்பினராக சேர்த்து விட்டால், அவருக்கு மாதந்தோறும் ரூ.18 ஆயிரம் ஊதியம் கிடைக்கும் என தெரிவித்துள்ளனர். 
இதையடுத்து, இந்த தனியார் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சுமார் 60-க்கும் மேற்பட்டோர் லட்சக் கணக்கில் பணம் செலுத்தியுள்ளனர்.
 இந்த நிலையில், இந்த தனியார் வேலைவாய்ப்பு அலுவலகத்தை அதன் நிர்வாகிகள் திடீரென மூடிவிட்டு தலைமறைவாகியுள்ளனர். இதையடுத்து, ஏமாற்றமடைந்த வகுத்தப்பட்டியைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் வினோத் (23), உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோர் அரூர் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகார் மனு அளித்தனர். அதன் பேரில், அரூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com