கால்நடை மருத்துவ முகாம் நடத்த வலியுறுத்தல்

அரூரை அடுத்த மத்தியம்பட்டி, மாம்பட்டி ஊராட்சிகளில் கால்நடை சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரூரை அடுத்த மத்தியம்பட்டி, மாம்பட்டி ஊராட்சிகளில் கால்நடை சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரூர் வட்டம், மத்தியம்பட்டி மற்றும் மாம்பட்டி ஊராட்சியில் 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. 
இந்த கிராமப் பகுதியில் ஆடு, மாடுகள் உள்பட சுமார் 8 ஆயிரம் கால்நடைகள் உள்ளன. இங்குள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கால்நடைகளை வளர்ப்பதை முக்கிய தொழிலாக கொண்டுள்ளனர்.
 இந்த நிலையில், மாம்பட்டி ஊராட்சி குமாரம்பட்டியில் விவசாயி பழனிசாமி என்பவருக்கு சொந்தமான 2 பசு மாடுகள் மர்ம நோய்த் தாக்குதலில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தன. இதேபோல், மத்தியம்பட்டி ஊராட்சி சட்டையம்பட்டியில் அண்மையில் பசுமாடுகள் உயிரிழந்திருப்பதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். 
மேலும், கிராமப் பகுதிகளில் மர்மான முறையில் கால்நடைகள் தொடர்ந்து உயிரிழந்து வருகின்றன. எனவே, அரசு கால்நடை பராமரிப்புத் துறை சார்பில், மத்தியம்பட்டி மற்றும் மாம்பட்டி ஊராட்சிகளில் சிறப்பு முகாம்கள் அமைத்து, கால்நடைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து கள ஆய்வு செய்து, தேவையான மருத்துவ சிகிச்சைகளை அளிக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் எதிர்பார்ப்பு. 
வட்டாட்சியர் ஆய்வு : மாம்பட்டி ஊராட்சி, குமாரம்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை இரண்டு பசுமாடுகள் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, அரூர் வட்டாட்சியர் (பொறுப்பு) கனிமொழி, வருவாய் ஆய்வாளர் ஆ.சிவஞானம், அரசு கால்நடை மருத்துவர் என். ராம்குமார் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கால்நடைகளுக்கு ஏற்பட்டுள்ள நோய் பாதிப்புகள் குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
கிருஷ்ணகிரி சுங்க வசூல் மையத்தில்
நீண்ட வரிசையில் காத்திருத்த வாகனங்கள்
கிருஷ்ணகிரி, அக்.21: தசரா பண்டிகைக்காக சொந்த ஊருக்குச் சென்றவர்கள் விடுமுறை முடித்து ஞாயிற்றுக்கிழமை வாகனங்களில் பெங்களூரு, ஒசூருக்குத் திரும்பியதால் கிருஷ்ணகிரி சுங்க வசூல் மையத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருக்க நேர்ந்தன.
தசரா பண்டிகை விடுமுறைக்குப் பிறகு பள்ளி, கல்லூரிகள் திங்கள்கிழமை மீண்டும் திறக்கப்பட உள்ளன. இத்தகைய நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒசூர், கர்நாடக மாநிலம் பெங்களூரு மற்றும் அதை சுற்றியுள்ளவர்கள் தசராவுக்காக தங்கள் சொந்த ஊரான சென்னை, திருவண்ணாமலை, வேலூர், தருமபுரி, கோவை, சேலம், திருச்சி, மதுரை, ஈரோடுக்கு சென்றுவிட்டு வாகனங்களில் தங்கள் பணி செய்யும் இடங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை திரும்பினர். 
இதனால், கிருஷ்ணகிரி அருகே உள்ள சுங்க வசூல் மையத்தில் கட்டணம் செலுத்துவதற்காக நீண்ட  தூரம் வாகனங்கள் வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. சுமார் 5 கி.மீ. தொலைவுக்கு வாகனங்கள் அணி வகுத்து நின்றதால், கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இரு சக்கர வாகனங்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள் செல்லும் பாதையிலும் கார்கள் அணிவகுத்து நின்றன.இந்த நிலையில், கிருஷ்ணகிரி சுங்க வசூல் மையத்தை தவிர்த்து பலர் ராயக்கோட்டை, ஒசூர் சாலை வழியாக சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com