தருமபுரியில் இன்று "நீட்' தேர்வு பயிற்சி வகுப்புகள் தொடக்கம்

தருமபுரி மாவட்டத்தில் சனிக்கிழமை பள்ளிக் கல்வித் துறை சார்பில், நீட் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்குகின்றன.

தருமபுரி மாவட்டத்தில் சனிக்கிழமை பள்ளிக் கல்வித் துறை சார்பில், நீட் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்குகின்றன.
தமிழக அரசுப் பள்ளி மாணவ, மாணவியரை நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்காக, அதற்கான பயிற்சி வகுப்புகள் தமிழகம் முழுவதும் செப்.15-ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் மாணவ, மாணவியருக்கு பாட வாரியாக பயிற்சி அளிக்க, 8 ஊராட்சி ஒன்றியத்தில் ஆசிரியர்கள் தேர்வு செய்து, அவர்களுக்கு தருமபுரி அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஏற்கெனவே சென்னையில் பயிற்சி பெற்ற கருத்தாளர்கள் மூலம் கடந்த ஆக.30, 31 மற்றும் செப்.10, 11, 12 ஆகிய ஐந்து நாள்கள் பயிற்சி அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பயிற்சி பெற்ற 80 ஆசிரியர்கள், மாவட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் தேர்வு செய்யப்பட்ட மையங்களில் பயிற்சி வழங்க உள்ளனர்.
இதில், ஆங்கில வழிக் கல்வி மாணவர்களுக்கு தருமபுரி ஒளவையார் மகளிர் மேல்நிலைப் பள்ளியிலும், தருமபுரி மற்றும் நல்லம்பள்ளி ஒன்றியத்தைச் சேர்ந்த மாணவ, மாணவியருக்கு இலக்கியம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியிலும் பயிற்சி வழங்கப்பட உள்ளது. மேலும், பென்னாகரம் ஒன்றியத்தில், பாப்பாரப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, பாலக்கோடு ஒன்றியத்தில் மாரண்டஹள்ளி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, காரிமங்கலம் ஒன்றியத்தில் பெரியாம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, மொரப்பூர் ஒன்றியத்தில் கடத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்தில், பாப்பிரெட்டிப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, அரூர் ஒன்றியத்தில் அரூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளில் 650 மாணவ, மாணவியருக்கு இப்பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளன. 
இந்த வகுப்புகள் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் காலாண்டுத் தேர்வு விடுமுறை நாள்களில் நடத்தப்பட உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com