விநாயகர் சிலைகள் விசர்ஜனம்

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் சனிக்கிழமை நீர்நிலைகளில் விசர்ஜனம் செய்யப்பட்டன.


தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் சனிக்கிழமை நீர்நிலைகளில் விசர்ஜனம் செய்யப்பட்டன.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டிய இடம், தேதி குறித்து மாவட்ட நிர்வாகம் பக்தர்களுக்கு அறிவுறுத்தியிருந்தது. அதன்படி, கிருஷ்ணகிரி அணை, கெலவரப்பள்ளி அணை, கௌரம்மா ஏரி, பிலிகுண்டு ஏரி, தென்பெண்ணை ஆறு, தளி ஏரி, அஞ்செட்டிப்பள்ளி ஏரி, சின்னபென்னங்கூர் ஏரி, பட்டாளம்மன் ஏரி, கவீஸ்வரர் குளம், கும்மனூர் ஆறு, கீழ்புதூர் ஏரி, பாரூர் ஏரி, பாம்பாறு அணை, பஞ்சப்பள்ளி அணை பகுதிகளில் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டன.
கிருஷ்ணகிரி அணையில் கிருஷ்ணகிரி, பர்கூர், காவேரிப்பட்டணம், ராயக்கோட்டை, மகாராஜகடை, தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இருந்து 477 பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகளை வாகனத்தில் எடுத்து வந்து விசர்ஜனம் செய்தனர்.
பென்னாகரம்
தருமபுரி மாவட்டத்தில் 1,223 விநாயகர் சிலைகள் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் விசர்ஜனம் செய்யப்பட்டன. இதையொட்டி, ஏராளமான தீயணைப்பு வீரர்கள், போலீஸார் ஒகேனக்கல்லில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியிருந்தபடி விநாயகர் சிலைகள் முதலைப்பண்ணை பகுதியில் காவிரியில் விசர்ஜனம் செய்யப்பட்டது. அப் பகுதியில் படகுகள் மூலம் நீச்சல் வீரர்கள் உதவியுடன் தீயணைப்பு வீரர்கள் ரோந்து சுற்றி வந்தனர்.
போச்சம்பள்ளி
பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் மஞ்சமேடு தென்பெண்ணை ஆற்றில் சனிக்கிழமை கரைக்கப்பட்டன.
மஞ்சமேடு, அரசம்பட்டி, அகரம், பண்ணந்தூர், குடிமேனஅள்ளி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து கொண்டுவரப்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பாதுகாப்புடன் தென்பெண்ணை ஆற்றில் கரைக்கப்பட்டன.
இதற்காக கேஆர்பி அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டிருந்தது. பாரூர் காவல் ஆய்வாளர் கபிலன் தலைமையிலான போலீஸார், போச்சம்பள்ளி தீயணைப்பு நிலைய அலுவலர் ஆறுமுகம் தலைமையிலான வீரர்கள் ஆற்றில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com