புளியம்பட்டி பட்டாளம்மன் கோயில் திருவிழா

புளியம்பட்டி கிராமத்தில் உள்ள ஸ்ரீபட்டாளம்மன் கோயில் திருவிழா வெள்ளிக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது.

புளியம்பட்டி கிராமத்தில் உள்ள ஸ்ரீபட்டாளம்மன் கோயில் திருவிழா வெள்ளிக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது.
 போச்சம்பள்ளியை அடுத்த புளியம்பட்டியில் உள்ள திப்பனூர் ஸ்ரீபட்டாளம்மன் கோயில் தேர்த் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இத் திருவிழாவில் புளியம்பட்டி, திம்மனாயக்கம்பட்டி, வேப்பலம்பட்டி ஆகிய பஞ்சாயத்துக்களைச் சேர்ந்த 44 கிராம மக்களும் மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக தேர் இழுத்து வந்து, அலங்கரிக்கப்பட்ட 7 கரகங்கள் ஒன்றுகூடல் நிகழ்ச்சியும், குண்டத்தில் இறங்கியும் சுவாமியை வழிபட்டனர்.
 மாலை 6 மணியளவில் ராட்டினத்தில் சுவாமியை ஒருபுறம் வைத்து, மறுபுறத்தில் சுவாமிக்கு படைத்த பழங்கள், பொரி, அவல் வைத்து ராட்டினத்தை சுற்றினர். ராட்டினத்தில் இருந்து தூக்கி வீசப்படும் பிரசாதங்களை குழந்தை இல்லாத தம்பதியினர் பக்தியுடன் முந்தானையில் பிடித்து உண்டு வணங்கினர்.
 திங்கள்கிழமை தொடங்கிய இந்த விழா வெள்ளிக்கிழமை நிறைவுற்றது. 19 ஆண்டுகளுக்கு பிறகு இந்த திருவிழா நடைபெறுவதால், அனைத்து பக்தர்களும் ஆவலுடன் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
 மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், பர்கூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் பாஸ்கரன் அறிவுறுத்தலின் படி, போச்சம்பள்ளி காவல் ஆய்வாளர் மனோகரன், பாரூர் காவல் ஆய்வாளர் சின்னசாமி, பர்கூர் காவல் ஆய்வாளர் பழனிச்சாமி, மத்தூர் காவல் ஆய்வாளர் ஆண்டவர் தலைமையிலான 100 }க்கும் மேற்ப்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com