விளையாட்டுப் போட்டி: வெற்றி பெற்றவர்களுக்குப் பாராட்டு

அரசம்பட்டி ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் பள்ளி மாணவர்கள் விளையாட்டுப் போட்டிகளில் சாதனை புரிந்துள்ளனர்.

அரசம்பட்டி ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் பள்ளி மாணவர்கள் விளையாட்டுப் போட்டிகளில் சாதனை புரிந்துள்ளனர்.
 கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் சுததந்திர தினவிழாவை முன்னிட்டு வியாழக்கிழமை நடைபெற்ற மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில், அரசம்பட்டி ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியைச் சார்ந்த மாணவ, மாணவியர் பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு சாதனை புரிந்தனர்.
 வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பள்ளிக் கல்வி ஆலோசகர் மாதேஷ், தாளாளர் ரஞ்சித்குமார், முதல்வர் வெங்கடேசன் மற்றும் ஆசிரியர்கள் பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com