அஞ்செட்டி அருகே ரூ.25 லட்சத்தில் கால்வாய் பணி

அஞ்செட்டி அருகே ரூ.25 லட்சத்தில் பாசனக் கால்வாய் அமைக்கும் பணியை கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் கே.அசோக்குமார் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.

அஞ்செட்டி அருகே ரூ.25 லட்சத்தில் பாசனக் கால்வாய் அமைக்கும் பணியை கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் கே.அசோக்குமார் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.
 கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருகே வண்ணத்துப்பட்டி தடுப்பணையிலிருந்து நல்லான் சக்கரவர்த்தி ஏரியை பாசனக் கால்வாய் மூலம் இணைக்க வேண்டும் என விவசாயிகள் பல ஆண்டுகளாக கோரி வந்தனர்.
 இந்த நிலையில், கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.25 லட்சத்தில் பொதுப்பணித் துறை-நீர்வள ஆதார அமைப்பின் மூலம் கால்வாய் அமைக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
 இந்தப் பணியை கே.அசோக்குமார் எம்.பி. தொடங்கி வைத்தார். அப்போது பொதுப்பணித் துறை பொறியாளர் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 இந்தக் கால்வாய் அமைப்பதன் மூலம் வண்ணாத்துபட்டி தடுப்பணையிலிருந்து சுமார் 2 கி.மீ. தூரம் உள்ள நல்லான் சக்கரவர்த்தி ஏரிக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படும். இதன் மூலம் அஞ்செட்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவு பாசன வசதி பெறும். குடிநீர் பிரச்னை தீர வாய்ப்பாக அமையும் என அப்போது அவர் தெரிவித்தார்.
 மேலும், தேன்கனிக்கோட்டை வட்டம், அஞ்செட்டியிலிருந்து ஒகேனக்கலுக்கு செல்லும் சாலையில் தொட்டஹள்ளா ஆற்றின் குறுக்கே கட்டப்படும் மேம்பாலப் பணிக்காக அமைக்கப்பட்ட தரைப் பாலம் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டது. அந்த இடத்தை பார்வையிட்ட அவர், மேம்பாலப் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என அலுவலர்களை கேட்டுக் கொண்டார்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com