தென்பெண்ணை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கிருஷ்ணகிரி அணையின் நீர்மட்டம் 50 அடியை எட்டியதையடுத்து, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றின் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி அணையின் நீர்மட்டம் 50 அடியை எட்டியதையடுத்து, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றின் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 கிருஷ்ணகிரி மாவட்டம், கர்நாடக மாநிலம், பெங்களூரு உள்ளிட்ட தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து மழை பெய்தது. இதனால், தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து. இதையடுத்து கிருஷ்ணகிரி மாவட்டம், கெலவரப்பள்ளி அணையிலிருந்து வியாழக்கிழமை வினாடிக்கு 2,340 கன அடி தண்ணீரும், வெள்ளிக்கிழமை வினாடிக்கு 1,380 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டது.
 வெள்ளிக்கிழமை காலை 8 மணி அளவில் கிருஷ்ணகிரி அணைக்கு நீர் வரத்தானது வினாடிக்கு 2,648 கன அடியாக இருந்தது. இதனால், அணையின் நீர் மட்டம் 47.25 அடியிலிருந்து, 49.50 கன அடியாக உயர்ந்தது. ஒரே நாளில் 2.25 அடி நீர்மட்டம் உயர்ந்தது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை (ஆக.18) மாலை 5 மணி நிலவரப்படி கிருஷ்ணகிரி அணையின் நீர்மட்டம் 50.10 அடியாக உயர்ந்தது. இருந்தபோதிலும் மாலையில் நீர்வரத்தானது வினாடிக்கு 1,400 கன அடியாக குறைந்தது.
 அணையின் நீர்மட்டம் 50 அடியை எட்டியுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றின் கரையோரத்தில் வசிக்கும் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையை பொதுப்பணித் துறையினர் விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com