மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியிலிருந்து வீணாகும் குடிநீர்

போச்சம்பள்ளி அருகே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியிலிருந்து ஒரு மாதத்துக்கு மேலாக குடிநீர் வீணாகி வெளியேறுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

போச்சம்பள்ளி அருகே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியிலிருந்து ஒரு மாதத்துக்கு மேலாக குடிநீர் வீணாகி வெளியேறுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
 தமிழ்நாடு குடிநீர் வாரியத்தின் தெண்பெண்ணை ஆற்று நீர் கிராமங்களுக்கு எடுத்துச் செல்வதற்காக புதுமோட்டூர் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு பம்ப் செய்து அதன் மூலம் ஊராட்சிகளுக்கு தண்ணீர் வழங்கப்படுகிறது.
 இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் பராமரித்து வருகிறது. கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து கிராமங்களுக்கு செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு நீர் வெளியேறி வருகிறது. இதனால் பெருமளவு நீர் வீணாவதுடன், அருகில் உள்ள நிலங்களில் குளம்போல் தேங்கி காட்சியளிக்கிறது. பல கிராமங்களுக்கு குடிநீர் முறையாக வழங்கப்படாத நிலையில், தண்ணீர் வீணாவதாக அப்பகுதி மக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
 இதுகுறித்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளரிடம் கேட்டபோது, இன்னும் இரண்டு தினங்களுக்குள் குழாய் பழுது நீக்கப்படும் என தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com