வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அவகாசம் நீட்டிப்பு

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க டிச.15-ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என்று சிறப்பு மேற்பார்வையாளர் ரீட்டா ஹாரீஸ் தாக்கர் தெரிவித்தார்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க டிச.15-ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என்று சிறப்பு மேற்பார்வையாளர் ரீட்டா ஹாரீஸ் தாக்கர் தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் சிறப்பு சுருக்க முறை திருத்த சிறப்பு மேற்பார்வையாளர் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ரீட்டா ஹாரீஷ் தாக்கர் தலைமையில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடுதல் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இக் கூட்டத்தில் சிறப்பு மேற்பார்வையாளர் ரீட்டா ஹாரீஸ் தாக்கர் பேசியது: 
1.1.2018-ஆம் தேதியை தகுதி நாளாக கொண்டு 18 வயது நிரம்பியவர்களை வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்கும் பொருட்டு சிறப்பு சுருக்க முறை திருத்தம் நடைபெற்று வருகிறது. 5.1.2018 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படவுள்ளது. ஒவ்வொரு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் வாக்காளர் முகவர்களை நியமித்துக் கொள்ள வேண்டும். 
வாக்காளர் அட்டைகள் இ.சேவை மூலம் வழங்கப்பட்டு வருகிறது. வாக்காளர் அட்டைகளை பெறாதவர்கள் இ. சேவை மையத்தை தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளலாம். மேலும், வாக்காளர் பெயர் பட்டியலில் பெயர் சேர்த்தல்,  நீக்கல் டிசம்பர் 15-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வாக்காளர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி, ஒசூர் சார் -ஆட்சியர் சந்திரகலா,  உதவி ஆட்சியர் அருண், அனைத்துத் தேர்தல் துணை வட்டாட்சியர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com