கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாளை குறை தீர்க்கும் கூட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் டிச. 9-இல் பொது விநியோகத் திட்ட சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் டிச. 9-இல் பொது விநியோகத் திட்ட சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது.
 இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் சார்பில், வியாழக்கிழமை வெளியான செய்தி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தில் காணப்படும் குறைபாடுகளைக் களைவதற்கும், மக்களின் குறைகளைக் கேட்டு உடனுக்குடன் அவற்றை நிவர்த்தி செய்யவும், குடும்ப அட்டைகளில் பெயர் திருத்தம், சேர்த்தல், நீக்கல் மற்றும் முகவரி மாற்றம் போன்ற குறைபாடுகளை நிவர்த்தி செய்ய ஒவ்வொரு மாதமும், இரண்டாவது சனிக்கிழமையன்று சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
 அந்த வகையில், இந்த மாதத்துக்கான சிறப்பு குறைதீர் கூட்டம், அந்தந்த வட்ட வழங்கல் அலுவலர்களால் டிச. 9-ஆம் தேதி நடத்தப்படுகிறது.
 கிருஷ்ணகிரி வட்டத்தில் நேரலகிரி, ஊத்தங்கரையில் அருண்பதி, பர்கூரில் பெருகோபனப்பள்ளி, ஒசூரில் தும்மனப்பள்ளி, போச்சம்பள்ளியில் கீழ்மயிலம்பட்டி, சூளகிரியில் செம்பரசனப்பள்ளி, தேன்கனிக்கோட்டையில் திம்ஜேப்பள்ளி ஆகிய இடங்களில் இந்த சிறப்பு குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது.
 இந்தக் கூட்டத்தில் பொதுமக்கள் பங்கேற்று, தங்களது குறைகளைத் தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com