ஏரியை தூர்வாரக் கோரி விவசாயிகள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

போச்சம்பள்ளியை அடுத்த திப்பனூர் ஏரியை தூர்வார அனுமதிக்க வலியுறுத்தி வட்டாட்சியர் அலுவலகம் முன் விவசாயிகள் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

போச்சம்பள்ளியை அடுத்த திப்பனூர் ஏரியை தூர்வார அனுமதிக்க வலியுறுத்தி வட்டாட்சியர் அலுவலகம் முன் விவசாயிகள் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 புளியம்பட்டி ஊராட்சிக்குள்பட்ட திப்பனூர் ஏரி சுமார் 77 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த ஏரியைச் சுற்றி புளியம்பட்டி, மைலம்பட்டி, கீழ்மைலம்பட்டி, திப்பனூர், முல்லைநகர், திருவயலூர், வடமலம்பட்டி உள்ளிட 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் ஏரியின் நீரைப் பயன்படுத்தி குடிநீர் மற்றும் விவசாயம் செய்து வருகின்றனர். இந்த ஏரியைச் சுற்றி சுமார் 2000 ஏக்கர் பரப்பளவில் சிறு குறு விவசாயிகள் நெல், தென்னை, வாழை உள்ளிட்ட பயிர்களை பயிரிட்டு வருகின்றனர். இந்த ஏரிக்கு, பாரூர் ஏரியிலிருந்து கால்வாய் மூலம் ஆண்டுதோறும் இரண்டு போக அறுவடைக்கு தண்ணீர் விடப்படுகிறது. இந்த ஏரி நிரம்பியதும் மீதமுள்ள தண்ணீர் பெனுகொண்டாபுரம் ஏரிக்கு கால்வாய் மூலம் அனுப்பப்படுகிறது. இந்த ஏரியின் நீர் சேமிக்கும் பகுதியை ஆழப்படுத்தினால் ஆண்டு முழுவதும் ஏரியில் நீர் நிரம்பி காணப்படும். மேலும் இங்குள்ள விவசாயிகள் விவசாயம் செய்யவும், குடிநீர்ப் பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைக்கும்.
 திப்பனூர் ஏரி தூர்வார அனுமதிக்கப்பட்டு இதுவரை தூர் வாரப்படாமல் நிலுவையில் உள்ளது. எனவே, ஒப்பந்தத்தை ரத்து செய்து திப்பனூர் ஏரியை தூர்வார அனுமதிக்க வேண்டுமென போச்சம்பள்ளி நான்கு வழிச் சாலையில் இருந்து முழக்கங்களை எழுப்பியவாறு வந்து போச்சம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகம் முன் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com