ஊத்தங்கரை அதியமான் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி 100 சதத் தேர்ச்சி

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் உள்ள அதியமான் மெட்ரிக். மேல் நிலைப்பள்ளி மாணவ-மாணவியர் 10-ம் வகுப்பு பொது தேர்வில் 100 சதவீதம்

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் உள்ள அதியமான் மெட்ரிக். மேல் நிலைப்பள்ளி மாணவ-மாணவியர் 10-ம் வகுப்பு பொது தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும், இப் பள்ளியில் தேர்வு எழுதிய 290 மாணவ, மாணவியர் அனைவரும் அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
ஊத்தங்கரை அதியமான் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி 500-க்கு 497 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். மற்றொரு மாணவி 496 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். 4 மாணவ, மாணவிகள் 494 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 75 பேர் கணிதத்திலும், 28 பேர் அறிவியலிலும், 149 பேர் சமுக அறிவியலிலும் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். 490 மதிப்பெண்களுக்கு மேல் 50-பேரும், 480-க்கு மேல் 134 பேரும் பெற்றுள்ளனர்.
 மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக பள்ளி ஆசிரியர்கள் இரவு பகல் பாராமல் மாணவர்களைப் பயிற்றுவிப்பதும், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உறுதுணையாக இருப்பதும் எங்கள் வெற்றிக்கு காரணமாக இருக்கிறது. இப் பள்ளி கல்வியில் மட்டுமின்றி, விளையாட்டு, யோகா, கராத்தே போன்ற இதர பயிற்சிகள் அளித்து, ஒவ்வொரு துறையிலும் சிறப்பாகச் செயல்பட்டு, மாணவர்கள் சாதனை புரியத் துணை புரிகிறது என பள்ளியின் நிறுவனர் சீனி.திருமால்முருகன் கூறினார்.  அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியரை முதல்வர் சீனி. கலைமணி, நிர்வாக அலுவலர் சீனி. கணபதிராமன், கல்லூரிச் செயலாளர் ஷோபா திருமால்முருகன், சீனிவாசா கல்வி அறக்கட்டளை தலைவர் மல்லிகா சீனிவாகன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டினர். சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com