கிருஷ்ணகிரி மாவட்டத்தில்  காவல் பணிக்கான எழுத்துத் தேர்வு13,420 பேர் எழுத உள்ளனர்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மே 21-ஆம் தேதி நடைபெறும் இரண்டாம் நிலை காவல் பணியிடங்களுக்கான தேர்வு 8 மையங்களில் 13,420 பேர் எழுத உள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மே 21-ஆம் தேதி நடைபெறும் இரண்டாம் நிலை காவல் பணியிடங்களுக்கான தேர்வு 8 மையங்களில் 13,420 பேர் எழுத உள்ளனர்.
 தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் தமிழ்நாடு சிறப்பு காவல்படை, ஆயுதப்படை, சிறைத் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறைகளில் 15,664 இரண்டாம் நிலை காவல் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கான எழுத்துத் தேர்வு மே 21-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ளது.
 அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து மட்டும் 15 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்தனர்.
விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டதில் 1,580 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு 13,420 பேர் தேர்வு எழுத உள்ளனர்.
 அதன்படி ஒசூர் அதியமான் பொறியியல் கல்லூரி, கோனேரிப்பள்ளி பெருமாள் மணிமேகலை பொறியியல் கல்லூரி, ஒசூர் விஜய் வித்யாலயா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, போலுப்பள்ளி அறிஞர் அண்ணா கலைக் கல்லூரி, கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, கிருஷ்ணகிரி நாளந்தா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி ஆகிய 8 தேர்வு மையங்களில் எழுத்துத் தேர்வு நடைபெறுகிறது.
 தேர்வினை எழுத செல்பவர்கள் கண்டிப்பாக அசல் நுழைவுச் சீட்டு (ஹால் டிக்கெட்) வைத்திருக்க வேண்டும். 9 மணிக்குள் தேர்வு அறைக்கு வந்துவிட வேண்டும்.
அசல் நுழைவுச் சீட்டு கிடைக்கப் பெறாதவர்கள் இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து, அதில் புகைப்படம் ஒட்டி அரசு அலுவலர் ஒருவரிடம் ஒப்பம் பெற்று செல்ல வேண்டும். தேர்வு மையத்துக்கு செல்லிடப்பேசி உள்ளிட்ட இதர மின்னணுக் கருவிகளை எடுத்துச் செல்லக்கூடாது. தேர்வு எழுத செல்வோர் பேனா (நீலம், கருப்பு பந்து முனை), எழுதும் அட்டை (கிளிப் இல்லாதது) மட்டுமே தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com