கிருஷ்ணகிரி ஸ்ரீதேவி கருமாரியம்மன் கோயிலில் சனீஸ்வரர் பிரதிஷ்டை

கிருஷ்ணகிரி ஸ்ரீதேவி கருமாரியம்மன் கோயிலில் சனீஸ்வரர் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

கிருஷ்ணகிரி ஸ்ரீதேவி கருமாரியம்மன் கோயிலில் சனீஸ்வரர் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
கிருஷ்ணகிரி புதிய குடியிருப்பு எண்-2 பகுதியில் ஸ்ரீதேவி கருமாரியம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் விநாயகர், துர்கை, கால பைரவர், தட்சிணாமூர்த்தி, நாகர், நவகிரகம் போன்ற சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, தினமும் பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர்.
இதையடுத்து, இந்தக் கோயில் வளாகத்தில் சனீஸ்வரர் பிரதிஷ்டை செய்ய தீர்மானிக்கப்பட்டு, அதன்படி சிறப்பு பூஜைகளுடன் சனீஸ்வரர் பிரதிஷ்டை அண்மையில் செய்யப்பட்டது. நிகழ்வுக்கான ஏற்பாடுகளை ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் ஜெயராமன், நீலாவதி உள்ளிட்டோர் ஒருங்கிணைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com