குறுவள மைய அளவிலான அறிவியல் கண்காட்சி

ஊத்தங்கரை ஒன்றியம், கெங்கபிராம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் குறு வள மைய அளவிலான அறிவியல் கண்காட்சி புதன்கிழமை நடைபெற்றது.

ஊத்தங்கரை ஒன்றியம், கெங்கபிராம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் குறு வள மைய அளவிலான அறிவியல் கண்காட்சி புதன்கிழமை நடைபெற்றது.
கண்காட்சியை ஜோதிநகர் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் செ.ராஜேந்திரன் தொடக்கி வைத்தார். இதில் இம் மையத்தைச் சார்ந்த 4 தொடக்கப் பள்ளிகள், 4 நடுநிலைப் பள்ளிகள் ஒரு உயர்நிலைப் பள்ளி என மொத்தம் 9 பள்ளிகள் பங்கு பெற்றன.
இதில், உப்பாரப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளி தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.  விழாவில் ஆசிரியப் பயிற்றுநர் ப.சிவப்பிரகாசம் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக அனைவருக்கும் கல்வி திட்ட மாவட்டப் பொறியாளர் ப.சரவணன் கலந்துகொண்டு மாணவர்களைப் பாராட்டினார்.
தொடக்கப் பள்ளிகள் சார்பில் மண்ணாண்டியூர், தாண்டியப்பணூர், அப்பிநாயகன்பட்டி, நாப்பிராம்பட்டி பள்ளிகளுக்கும், உயர் தொடக்க நிலைப் பள்ளிகள் சார்பில் உப்பாரப்பட்டி, ஜோதிநகர், நாப்பிராம்பட்டி, கெங்கபிராம்பட்டி  பள்ளிகளுக்கும் முதல், இரண்டு மூன்று பரிசுகளும், ஒட்டுமொத்த படைப்புகளுக்கான பரிசுகளும் வழங்கப்பட்டன. விழாவில் அனைத்துப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும், உதவி ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். கெங்கபிராம்பட்டி பள்ளி தலைமை ஆசிரியர் மா.அனுசுயா நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com