ஸ்ரீ ராம் மெட்ரிக். பள்ளியில் அறிவியல் கண்காட்சி

கம்பைநல்லூர் ஸ்ரீ ராம் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி அண்மையில் நடைபெற்றது.

கம்பைநல்லூர் ஸ்ரீ ராம் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி அண்மையில் நடைபெற்றது.
அறிவியல் விஞ்ஞானிகள் சர்.சி.வி.ராமன், மேரி கியூரி ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற இந்த அறிவியல் கண்காட்சியை கம்பைநல்லூர் இந்தியன் வங்கி கிளை மேலாளர் வரதய்யா ராகம் தொடக்கி வைத்தார்.
இதில் பள்ளி மாணவர்கள் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாட வாரியாக தங்களது படைப்புகளை வைத்திருந்தனர்.
இந்த அறிவியல் கண்காட்சியை கம்பைநல்லூர் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் பார்வையிட்டனர்.
இதில், ஸ்ரீ ராம் மெட்ரிக். பள்ளியின் நிறுவனர் எம்.வேடியப்பன், தாளாளர் சாந்தி வேடியப்பன், நிர்வாக இயக்குநர் வே.தமிழ்மணி, பவானி தமிழ்மணி, சீனிவாசன், பள்ளி முதல்வர்கள் சாரதி மகாலிங்கம், ஜான் இருதயராஜ், ஒருங்கிணைப்பாளர்கள் ரா.புவனேஸ்வரி, ஆர்.ரேவதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com