ஒசூரில் தனியார் நகைக் கடையில் நகை சீட்டு மோசடி

ஒசூரில் தனியார் நகைக் கடையில் நகை சீட்டு மோசடி நடந்ததைத் தொடர்ந்து, சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் இரண்டு நாள்களாக சோதனையில் ஈடுபட்டனர்.

ஒசூரில் தனியார் நகைக் கடையில் நகை சீட்டு மோசடி நடந்ததைத் தொடர்ந்து, சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் இரண்டு நாள்களாக சோதனையில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் பழைய நகராட்சி அலுவலகம் எதிரே கடந்த 2011 முதல் பிரபலமான தனியார் நகைக் கடை இயங்கி வந்தது. இங்கு, ஒசூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள 900-க்கும் மேற்பட்டோர் நகை சீட்டு கட்டி வந்தனர்.
இந்த நிலையில், கடந்த அக்.16-ஆம் தேதி அந்த நகைக் கடை மூடப்பட்டது. இதையடுத்து, நகை சீட்டு கட்டிய பொதுமக்கள், மாவட்ட குற்றப்பிரிவு போலீஸில் புகார் செய்தனர்.
இதேபோல், சென்னையில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவிலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதையடுத்து, நீதிமன்ற உத்தரவுப்படிவெள்ளிக்கிழமை சேலம் பொருளாதார குற்றப்பிரிவு ஆய்வாளர் தண்டபாணி தலைமையிலான போலீஸார், ஒசூர் நகைக் கடையில் சோதனை செய்தனர். அப்போது,அங்கு இருந்த, ரூ.50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை போலீஸார் கைப்பற்றினர். மேலும், வெள்ளி மற்றும் மரச் சாமான்கள் உள்ளிட்ட அனைத்து பொருள்களும் கைப்பற்றப்பட்டன.
காலையில் தொடங்கிய ஆய்வு இரவு வரை தொடர்ந்து நடந்ததுடன், நகை மதிப்பீட்டாளர் மூலம், எவ்வளவு நகை உள்ளது என எடை போட்டனர். அங்கு நகை சீட்டு கட்டி ஏமாந்த பொதுமக்கள் ஏராளமாக திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை போலீஸார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com