குழந்தைகள் தின விழா கொண்டாட்டம்

கிருஷ்ணகிரியில் குழந்தைகள் தின விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

கிருஷ்ணகிரியில் குழந்தைகள் தின விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
கிருஷ்ணகிரி  அரசு அருங்காட்சியகம்,  மாவட்ட மைய நூலகம் ஆகியன இணைந்து நடத்திய 50 -ஆவது நூலக வார விழா,  குழந்தைகள் தின விழாவையொட்டி ஓவியப் போட்டி நடைபெற்றன. போட்டிக்கு நூலக ஆய்வாளர் ஆனந்தி தலைமை வகித்தார். அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் போட்டியைத் தொடங்கி வைத்தார். 6 முதல் 8-ஆம் வகுப்பு வரையில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இயற்கைக் காட்சிகள் என்ற தலைப்பிலும்,  9, 10  வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு நீர்வளம் காத்து,  நில வளம் பெருக்குவோம் என்ற தலைப்பிலும் ஓவியப் போட்டிகள் நடைபெற்றன.  இதில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 70 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
இதில்,  ஓவிய ஆசிரியர்கள் பன்னீர்செல்வம்,  தமிழ்ச்செல்வன், மோகன சித்ரா,  ஸ்ரீதரன் ஆகியோர் கொண்ட குழுவினர் சிறந்த ஓவியங்களை தேர்வு செய்தனர். தேர்வு செய்யப்பட்ட 12 பேருக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
காவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பாரத சாரணர் சங்கம் சார்பில் நடைபெற்ற விழாவுக்கு உதவித் தலைமை ஆசிரியர் சீனிவாசன் தலைமை வகித்தார். பாரத சாரணர் சங்க ஒன்றியச் செயலர் பவுன்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முன்னாள் பிரதமர் நேரு குறித்து பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி போன்ற போட்டிகள்  நடத்தப்பட்டன. சுதந்திர போராட்டத்தில் நேருவின் பங்களிப்பு என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
கிருஷ்ணகிரி விஜய் இன்ஸ்டிடியூட் ஆப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் என்ற கல்வி நிறுவனம் சார்பில் நடைபெற்ற விழாவில் அதன் தாளாளர் எம்.துரை (எ) துரைசாமி தலைமை வகித்தார். நேருவின் உருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இனிப்புகள் வழங்கப்பட்டன.
ஊத்தங்கரையில்...
ஊத்தங்கரை ஒன்றியம், ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில்  தமிழ் இலக்கிய மன்றம் சார்பில் குழந்தைகள் தின விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் செ. ராஜேந்திரன் தலைமை வகித்தார்.முன்னதாக  பள்ளி உதவி ஆசிரியர் மு. லட்சுமி வரவேற்றார். முன்னாள் பிரதமர் ஜவாஹர்லால் நேரு பிறந்தநாள் குழந்தைகள் தின விழாவாக கொண்டாடுவது பற்றி எடுத்துக் கூறினர்.  பள்ளி மாணவர்களுக்கு  எனக்குப் பிடித்த நேரு மாமா என்ற தலைப்பில் பேச்சு மற்றும் கவிதை  மூலம் வெளிப்படுத்தினர். பல்வேறு போட்டிகளில்  வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சிறப்புப் பரிசுகளை பள்ளித் தலைமை ஆசிரியர் வழங்கினார். மேலும் பள்ளியில் மரம் வளர்ப்பு, தோட்டப் பராமரிப்பு ஆகியவற்றில் சிறப்பாக செயல்படும்  10 மாணவர்களுக்கு பதக்கங்கள், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.உதவி ஆசிரியர் திலகா வாழ்த்திப் பேசினார். பள்ளி உதவி ஆசிரியர் வே. வஜ்ஜிரவேல் நன்றி கூறினார்.
போச்சம்பள்ளியில்...
போச்சம்பள்ளி எம்ஜிஎம்  பப்ளிக் பள்ளி  (சிபிஎஸ்இ) மற்றும் எம்ஜிஎம் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளிஇணைத்து நடத்திய குழந்தைகள் தினவிழா மற்றும் டெங்கு விழிப்புணர்வுப் பேரணி மற்றும் குழந்தைகளின் கலைநிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடை பெற்றது.
விழாவுக்கு பள்ளித் தலைவர் ஜி.பி.பன்னீர் தலைமை வகித்தார். பள்ளித் தாளாளர் என்.மாதவி பன்னீர் முன்னிலை வகித்தார். பேரணியை போச்சம்பள்ளி வட்டாட்சியர் டி.கோபிநாத் கொடிய
சைத்து தொடக்கி வைத்தார். பேரணியில் பள்ளியின் சாரண, சாரணியர், இளம் செஞ்சிலுவை சங்கத்தினர் மற்றும் அனைத்து மாணவர்கள்,  முன்னாள் பிரதமர் ஜவாஹர்லால் நேரு  போன்று வேடமணிந்தும், டெங்கு விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியும் சென்றனர்.
இதில் பள்ளி இயக்குநர் பி.ரகுவீரன், டெங்கு விழிப்புணர்வின் முக்கியம் பற்றி எடுத்துரைத்தார்.  போச்சம்பள்ளி காவல் துறையினர் குழந்தைகளுக்கு ரோஜா மலர் அளித்து வாழ்த்து தெரிவித்தனர். பள்ளி முதல்வர் கே.ராஜ்குமார் நன்றி கூறினார்.
கே.மோட்டூர் அரசு தொடக்கப் பள்ளியில் குழந்தைகள் தின விழா கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
போச்சம்பள்ளியை அடுத்த கே.மோட்டூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் முன்னாள் பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் 128 -ஆவது பிறந்த நாளை முன்னிட்டு குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் தலைமை வகித்தார், நிகழ்ச்சியில் பள்ளிக் குழந்தைகள் தேசத் தலைவர்கள் போல வேடமணிந்து கலை நிகழச்சியில் பங்கேற்றனர். அதனைத் தொடர்ந்து பள்ளியில்  கேக் வெட்டி குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவில் வி.இ.சி. எஸ்.எம்.சி. உறுப்பினர்கள்,  பெற்றோர்கள் மற்றும் குழந்தைகள் கலந்து கொண்டனர். குழந்தைகளுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.
தருமபுரியில்...
தருமபுரி மாவட்டம்,  பென்னாகரம் அருகே சின்னப்பள்ளத்தூர் நடுநிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை குழந்தைகள் தின விழா நடைபெற்றது.
பள்ளித் தலைமை ஆசிரியர் மா.பழனி தலைமை வகித்து நேருவின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, அவரது வாழ்க்கை வரலாறு குறித்து எடுத்துரைத்தார்.
விழாவில்,  பாடல்,  நடனம்,  மாறு வேடப் போட்டி ஆகியவை நடத்தப்பட்டு, சிறப்பிடம் வகித்த மாணவ, மாணவியருக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.  ஆசிரியைகள் வளர்மதி,  ரதி,  திலகவதி, லதா மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com