பள்ளி மாணவிகள் திருமணத்துக்கு ஒத்துழைக்கக் கூடாது: நீதிபதி அறிவுரை

பெற்றோர்கள் திருமணத்துக்குக் கட்டாயப்படுத்தும்போது பள்ளி மாணவிகள் ஒத்துழைப்பு அளிக்கக் கூடாது என மாவட்ட முதன்மை நீதிபதி அறிவுறுத்தினார்.

பெற்றோர்கள் திருமணத்துக்குக் கட்டாயப்படுத்தும்போது பள்ளி மாணவிகள் ஒத்துழைப்பு அளிக்கக் கூடாது என மாவட்ட முதன்மை நீதிபதி அறிவுறுத்தினார்.
கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சமூக பாதுகாப்புத் துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு ஆகியவை இணைந்து நடத்திய குழந்தைகள் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஊர்வலம், கையெழுத்து இயக்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் டி.மகேஷ்குமார், மாவட்ட சட்டப் பணிகள் ஆணையக் குழுத் தலைவர் கே.அறிவொளி,  செயலர் எஸ்.தஸ்னீம்,  நீதிபதிகள் ஜெயஸ்ரீ, லீலா,  சசிகலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்வை தொடக்கி வைத்து மாவட்ட முதன்மை நீதிபதி ஆர்.பூர்ணிமா பேசியது: பள்ளி குழந்தைகள் படிக்கும் காலத்தில், தங்களது இலக்கை நிர்ணயித்து கடின உழைப்போடு பயணிக்க வேண்டும். அப்போதுதான், எண்ணியதை அடைய முடியும். வாழ்க்கையில் பெண்கள் அனைத்துத் துறைகளிலும் பணியாற்றி வருகின்றனர். நன்கு கல்விக் கற்று, தங்களது வாழ்க்கையில் உயர வேண்டும்.
பெற்றோர்கள், திருமணம் செய்யக் கட்டாயப்படுத்தும்போது, மாணவிகள் ஒத்துழைக்கக் கூடாது. இதுகுறித்து புகார் தெரிவிக்கும் பட்சத்தில் சட்டம் உங்களுக்கு பாதுகாப்பு அளிக்கும். பெண் குழந்தைகளைப் பாதுகாக்கக் சட்டம் உள்ளது. இதன் மூலம் சட்டம் உங்களுக்கு உதவிகள் செய்யத் தயாராக இருக்கிறது என்றார்.
தொடர்ந்து நடைபெற்ற விழிப்புணர்வு ஊர்வலம், தர்மராஜா கோயில் தெரு, பழையபேட்டை காந்தி சிலை, காந்தி சாலை, வட்டச் சாலை வழியாகச் சென்று மீண்டும் பள்ளி வளாகத்தில் நிறைவு பெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com