கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கிருஷ்ணகிரியில் ஓய்வூதியர்கள் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கிருஷ்ணகிரியில் ஓய்வூதியர்கள் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் கிருஷ்ணகிரி புறகர் பேருந்து நிலையம் அருகேயுள்ள அண்ணா சிலை எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் துரை தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் சரவணபவன்,  செயலர் தண்டபாணி, மின்வாரிய ஓய்வுபெற்ற சம்மேளனத்தின் மாவட்டச் செயலர் சந்திரசேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
தமிழக அரசு ஊதியக் குழு அலுவலர்களின் பரிந்துரையை வெளியிட வேண்டும். தொகுப்பூதியம், மதிப்பூதியம் பெறும் சத்துணவு,  அங்கன்வாடி, வருவாய் கிராம ஊழியர்கள், ஊராட்சி எழுத்தர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைபடுத்த வேண்டும். சூளகிரி, ஒசூர், தேன்கனிக்கோட்டை பகுதிகளில் வசிக்கும் ஓய்வூதியர்களுக்கு மலைவாழ் மற்றும் குளிர்கால படி வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் முழக்கங்களை எழுப்பினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com