குண்டர் சட்டத்தின் கீழ் இருவர் சிறையிலடைப்பு

மத்தூர் அருகே வீட்டில் எரிசாராயம் பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட பெண் உள்பட இருவரை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க 

மத்தூர் அருகே வீட்டில் எரிசாராயம் பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட பெண் உள்பட இருவரை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் புதன்கிழமை உத்தரவிட்டார்.
 கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகே ஆம்பள்ளி கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் 8,225 லிட்டர் எரிசாராயம் பதுக்கி வைத்திருந்ததை போலீஸôர் கடந்த மாதம் 16-ஆம் தேதி பறிமுதல் செய்தனர்.
 இதுதொடர்பாக வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் வட்டம், புள்ளனேரி கிராமத்தைச் சேர்ந்த செந்தில்குமார் (36), அதைப் பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் மனைவி ராஜேஸ்வரி (26) ஆகிய இருவரையும் போலீஸôர் கைது செய்தனர்.
 இருவர் மீதும் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததால் இருவரையும் குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியருக்கு கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மகேஷ்குமார் பரிந்துரைத்தார். இந்தப் பரிந்துரையை ஏற்ற மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் இருவரையும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com