ஓகேனக்கல் கூட்டுக் குடிநீர் குழாய் உடைப்பு

ஓகேனக்கல் கூட்டுக் குடிநீர் குழாய் உடைந்ததில், பெருமளவு குடிநீர் வீணாகிறது

ஓகேனக்கல் கூட்டுக் குடிநீர் குழாய் உடைந்ததில், பெருமளவு குடிநீர் வீணாகிறது.
 தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் தாகத்தை தீர்க்க பாதுகாக்கப்பட்ட குடிநீர் திட்டம் தொடங்கப்பட்டு, ஓகேனக்கல் காவிரி ஆற்றில் இருந்து ராட்சத மின் மோட்டார்கள் மூலம் தண்ணீர் உறிஞ்சப்படுகிறது. அவ்வாறு உறிஞ்சப்பட்டு தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கு குடிநீர் வழங்கப்படுகிறது.
 இந்நிலையில், மத்தூரில் இருந்து சாமல்பட்டி செல்லும் சாலையில் முருகன் கோயில் எதிரில் உள்ள மேம்பாலம் கீழ் குழாய் உடைந்து பனை மரம் உயரத்துக்கு தண்ணீர் பீய்ச்சி அடிக்கிறது.
 இதனால் அந்தப் பகுதிகளுக்கு செல்லும் ஓகேனக்கல் குடிநீர் தடைபட்டுள்ளது. வீணாகும் குடிநீரை அருகில் உள்ள பெண்களும், ஆண்களும் குடங்களில் பிடித்துச் செல்கின்றனர். எனவே, குடிநீர் குழாயை விரைந்து சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com