தேன்கனிக்கோட்டையில் துப்பாக்கி சூட்டில் பலியான 4 பேருக்கு நினைவஞ்சலி

தேன்கனிக்கோட்டையில் கடந்த 27 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த துப்பாக்கிச் சூட்டில் பலியான 4 பேருக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

தேன்கனிக்கோட்டையில் கடந்த 27 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த துப்பாக்கிச் சூட்டில் பலியான 4 பேருக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
தேன்கனிக்கோட்டை மேல்கோட்டை அருகே கடந்த 1990 ஆண்டு அக்.10-ஆம் தேதி  ராம ஜோதி ரத ஊர்வலம் புறப்பட்டது. அப்போது ஏற்பட்ட வன்முறையில் போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 4 பேர் உயிரிழந்தனர்.  அந்த 4 பேருக்கும் நினைவஞ்சலி மற்றும் பொதுக்கூட்டம் தேன்கனிக்கோட்டை கோட்டை வாசல் அருகில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மாவட்டத் தலைவர் அன்னையப்பா தலைமை வகித்தார். விஷ்வ ஹிந்து பரிஷத் மாவட்ட துணைத் தலைவர் ரங்கநாத் முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலர் சாந்தகுமார் வரவேற்றார். கோவை காமாட்சி தலைமை ஆதீனம் ஞானகுரு,  பா.ஜ.க. மாநில பொதுச் செயலாளர் நரேந்திரன், கோட்டப் பொறுப்பாளர் பாலகிருஷ்ணன், இளைஞர் அணி செயலர் நாகராஜ், மாநில விஷ்வ ஹிந்து பரிஷத் இணைச் செயலர் விஷ்ணுகுமார் ஆகியோர் பேசினர்.
இதில் மாவட்ட இந்து முன்னணி பொதுச் செயலர் சந்துரு, பஜ்ரங்தள் மாவட்ட அமைப்பாளர் தேவராஜ், ஒன்றியச் செயலர் நாகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தேன்கனிக்கோட்டை சார்- பதிவாளர் அலுவலகச் சாலையில் உள்ள ஆஞ்சநேயர் கோயில் அருகில் ஜோதி ஏற்றப்பட்டு ஊர்வலம் புறப்பட்டது. இந்த ஊர்வலம் பேருந்து நிலையம், மண்டி தெரு, காந்தி சாலை கடைவீதி வழியாக நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com