ஊத்தங்கரையில் நீதிமன்றக் கட்டடம் திறப்பு

ஊத்தங்கரையில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றங்களின் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

ஊத்தங்கரையில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றங்களின் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
ஊத்தங்கரையில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றமும்,  சார்பு நீதிமன்றம் இயங்கி வருகின்றன.
இதில்  உரிமையியல் நீதிமன்றத்தைத் தனியாகவும், குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தை தனியாகவும் அமைக்க வேண்டும் எனக் கோரிக்கை
விடுக்கப்பட்டது.
இதையடுத்து ஊத்தங்கரை நீதிமன்ற வளாகத்தில் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் மற்றும் உரிமையியல் நீதிமன்றம் தனித்தனியாக அமைக்கப்பட்டு அதன் திறப்புவிழா புதன்கிழமை நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை நீதிபதி பூர்ணிமா பங்கேற்று நீதிமன்ற கட்டடங்களைத் திறந்து வைத்தார்.
ஊத்தங்கரை சார்பு நீதிபதி சுகந்தி வரவேற்றார். மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதி அன்புச்செல்வி, சட்டப் பணிகள் குழுத் தலைவர் அறிவொளி, சார்பு நீதிபதி ஜெயஸ்ரீ, மோட்டார் வாகன நீதிமன்ற நீதிபதி லீலா, மாவட்ட சட்டப் பணிகள் செயலாளர் தஸ்லீம், கிருஷ்ணகிரி குற்றவியல் நீதிமன்ற நடுவர் ஜெயபிரகாஷ், ஊத்தங்கரை நீதிமன்ற நடுவர் ராஜேஷ் ராஜூ, மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி ராஜசேகர், கிருஷ்ணகிரி வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் பாண்டி, போச்சம்பள்ளி தலைவர் பீமராஜ், தமிழ்நாடு பார் கவுன்சில் உறுப்பினர் அய்யப்பன்மணி, ஊத்தங்கரை வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் குணசேகரன், செயலாளர் மூர்த்தி, மூத்த வழக்குரைஞர் ரங்கநாதன், டி.எஸ்.பி. அர்ச்சுனன் உள்ளிட்ட பலரும் வாழ்த்திப் பேசினர்.
நிகழ்ச்சியில் வழக்குரைஞர்கள் ராமசாமி, கணநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சிகளை வழக்குரைஞர் முருகன் தொகுத்து வழங்கினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com