டெங்கு ஒழிப்புப் பணி: ஊத்தங்கரையில் ஆட்சியர் ஆய்வு

ஊத்தங்கரையில் மாவட்ட ஆட்சியர் சி. கதிரவன் டெங்கு ஒழிப்பு குறித்து புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

ஊத்தங்கரையில் மாவட்ட ஆட்சியர் சி. கதிரவன் டெங்கு ஒழிப்பு குறித்து புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
ஊத்தங்கரை பேரூராட்சியில் டெங்கு காய்ச்சல் பரவுவதைத் தடுக்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மழையில் நீர்த்தேங்கி உள்ளதா? என வீடுகள் மற்றும் கடைகள் உள்ள பாத்திரங்களில் மழைநீர்த் தேங்கி உள்ளதா? என்பதைக் கண்டறிய ஆய்வு மேற்கொண்டார்.
கிருஷ்ணகிரி சாலையில் உள்ள தனியார் கடையில் விற்பனைக்காக வைத்திருந்த புதிய சின்டெக்ஸ் டேங்குகளில் மூடி இல்லாமல் கொசு உற்பத்தியாகும் லார்வாக்கள் இருந்ததை கண்டறிந்து அந்த சின்டெக்ஸ் டேங்குகளை பறிமுதல் செய்து ரூ. 25, 000 அபராதம் விதித்தும் , அபராதத் தொகை செலுத்தும் வரை கடையை மூடி வைக்கவும்  மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
மேலும் ஊத்தங்கரை திருமணக் கூடம். பிறகு பேரூராட்சியில் பேருந்து நிலையத்தில் உள்ள குடிநீர் தொட்டிகளை பார்வையிட்டார். தொடர்ந்து பாம்பாறு அணைக்கு வரும் உபரி நீரை பார்வையிட்டார். ஆய்வின் போது பேரூராட்சியின் பொறியாளர் சி.ராஜேந்திரன், பணி மேற்பார்வையாளர் கே. மகேந்திரன்,வித்யா மந்திர் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் வே. சந்திரசேகரன், தணிகை கருணாநிதி மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் உடன் இருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com