தேன்கனிக்கோட்டை அருகே ராட்சத பாறை உருண்டு சாலையில் விழுந்தது.
தேன்கனிக்கோட்டை அருகே மலையடிவாரத்தில் உள்ளது குந்துகோட்டை கிராமம். தேன்கனிக்கோட்டை சுற்று வட்டாரப் பகுதிகளில் பலத்த மழை பெய்ததில், குந்துகோட்டை மலையில் இருந்து 50 அடி உயரத்தில் இருந்து ராட்சத பாறை ஒன்று உருண்டு சாலையில் விழுந்தது. பொதுமக்கள் யாரும் அங்கு இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.