"ஒலி மாசு, புகையில்லா தீபாவளி கொண்டாட வேண்டும்'

ஒலி  மாசு, புகையில்லா தீபாவளி கொண்டாட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் தெரிவித்துள்ளார்.

ஒலி  மாசு, புகையில்லா தீபாவளி கொண்டாட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர், திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாட்டில் தீபாவளி அன்று பட்டாசுகளை வெடித்து கொண்டாடுவது வழக்கம். இந்தப் பண்டிகை மற்றும் விழாக்காலங்களில் பட்டாசுகளை வெடிப்பதால் எழும் ஒலி தாற்காலிக செவிட்டுத் தன்மையையும், தொடர் ஓசை நிரந்தரமான செவிட்டுத் தன்மையையும் ஏற்படுத்தக் கூடிய வாய்ப்பு உள்ளது.  கட்டுப்பாடற்ற அதிக ஒலி,  ஒளியுடன் கூடிய வெடிகளையும்,  காலவரையின்றி பாதுகாப்பு அற்றவகையில் பட்டாசுகள் வெடிப்பதைக் கருத்தில் கொண்டும் பொது நல வழக்கு உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டது.
இதையடுத்து, காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையில் வெடிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், அதிக ஒலி மாசு, அதிக ஒலி,  ஒளியால் ஏற்படும் தீமைகள் குறித்து பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரையில் ஒலி எழுப்பக் கூடிய பட்டாசுகளை கண்டிப்பாக வெடிக்கக் கூடாது. விதிமுறைகளைக்
கடைப்பிடிக்காமல் உற்பத்தி மற்றும் விற்பனை செய்யும் பட்டாசுகளை வாங்கக் கூடாது.  எனவே, பொதுமக்கள் அனைவரும் அவரவர் குடும்பம், நண்பர்கள் மற்றும் அண்டை அயலாருடன் சாதி, மத பேதமின்றி பாதுகாப்பாகவும்,  ஒலி மற்றும் காற்று மாசற்ற சுற்றுச்சூழலுக்கு உகந்து  தீபாவளியை அமைதியாகக் கொண்டாடி மகிழும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com