லேப் டெக்னீஷியன்கள் நலச் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரியில் பாரா மெடிக்கல் லேப் டெக்னீஷியன் கல்வி மற்றும் நலச் சங்கம் சார்பில் 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கிருஷ்ணகிரியில் பாரா மெடிக்கல் லேப் டெக்னீஷியன் கல்வி மற்றும் நலச் சங்கம் சார்பில் 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கிருஷ்ணகிரி புறநகர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு அந்த சங்கத்தின் மாநில துணைத் தலைவர் குழுதன் தலைமை வகித்தார். மாநிலக் குழு உறுப்பினர் செல்வம், , சி.ஐ.டி.யூ. மாவட்டத் தலைவர் ஜெயராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
லேப் அறிக்கையில் லேப் டெக்னீஷியன்கள் கையெழுத்திடக் கூடாது என்ற மெடிக்கல் கவுன்சில் உத்தரவை வாபஸ் பெற வேண்டும். தனியார் மருத்துவத் துறையில் பணிபுரியும் ஊழியர்களின் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்த வேண்டும். அரசுத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். ரத்தப் பரிசோதனைக் கூடங்களுக்கு அரசு அங்கீகாரம் அளிக்க வேண்டும்.
லேப் டெக்னீஷியன் கவுன்சிலை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். மருத்துவ ஆய்வக நுட்புனர்களுக்கு இலவசமாக மருத்துவக் காப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் முழக்கங்களை எழுப்பினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com