"இளைஞர்களால் மட்டுமே இணையதள குற்றங்களை தடுக்க இயலும்

இணையதள குற்றங்களை இளைஞர்களால் மட்டுமே தடுக்க இயலும் என கிருஷ்ணகிரி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு தலைவர் ஆர்.பூர்ணிமா தெரிவித்தார்.

இணையதள குற்றங்களை இளைஞர்களால் மட்டுமே தடுக்க இயலும் என கிருஷ்ணகிரி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு தலைவர் ஆர்.பூர்ணிமா தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அரசு பொறியியல் கல்லூரி கூட்டரங்கில், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் இணைய குற்றங்கள் குறித்த சட்ட விழிப்புணர்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த முகாமுக்கு மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான பூர்ணிமா தலைமை வகித்து பேசியது: இணையதள குற்றங்களில் நாட்டில் தமிழ்நாடு மூன்றாவது இடத்தில் உள்ளது. தற்போது தற்கொலையைத் தூண்டும் விளையாட்டை விளையாடியதில் 13-முதல் 200 பேர் தற்கொலை செய்துகொண்டதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இதுபோன்ற விளையாட்டில் இளைஞர்கள் ஈடுபடாமல் இருப்பது மட்டுமல்ல, மற்றவர்களும் விளையாடாமல் இருக்க விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும். திடீரென, அறிமுகமில்லாத நபர் உங்களிடம் பழகத் தொடங்கினால் அவர்களிடம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். உங்களைப் பற்றியோ அல்லது புகைப்படத்தையோ அவர்களுக்கு அனுப்பக் கூடாது. அதை அவர்கள் தவறாக பயன்படுத்தலாம். அறிமுகமில்லாத நபர் உங்களை தனியாகச் சந்திக்க அனுமதிக்கக் கூடாது. குற்றங்கள் நடைபெறுவதைத் தடுக்க இளைஞர்களால் மட்டுமே இயலும். தேவையற்ற காரியங்களில் தலையிடாமல், சாதிக்க வேண்டிய வயதில் கடினமாக உழைத்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றார் அவர். முகாமில் கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஷ்குமார், அரசு பொறியியல் கல்லூரி முதல்வர் பி.திருமால் மற்றும் மாணவ, மாணவியர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com