வறண்ட ஏரிகளில் தென்பெண்ணை ஆற்று நீரை நிரப்ப நடவடிக்கை தேவை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வறண்டுள்ள ஏரிகளை தென்பெண்ணை ஆற்று நீரைக் கொண்டு நிரப்ப மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வறண்டுள்ள ஏரிகளை தென்பெண்ணை ஆற்று நீரைக் கொண்டு நிரப்ப மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
 கிருஷ்ணகிரியை அடுத்த வட்டகொன்னை கிராமத்தில் அச் சங்க கிளை தொடக்க விழா, ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சங்கத்தின் மாவட்ட ஆலோசகர் நஷீர் அகமது தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் கே.எம்.ராமகவுண்டர், சங்க நிர்வாகிகள் சண்முகம், கணேசன், பேரப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து பெய்து வரும் மழையால் கிருஷ்ணகிரி அணை நிரம்பி இதுவரை 21 டிஎம்சி தண்ணீர் தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
 கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெரும்பாலான ஏரிகள் இன்னும் வறண்டு காணப்படுகின்றன. இத்தகைய நிலையில், தென்பெண்ணை ஆற்றிலிருந்து தருமபுரி, வேலூர் மாவட்டங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கக் கூடாது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளிலும் தண்ணீர் நிரப்பிய பின்னரே, அண்டை மாவட்டங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்ல வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com