தலைமை இல்லாமல் திணறுகிறது அதிமுக: எல்.கே.சுதீஷ்

சிறந்த தலைமை இல்லாததால் அதிமுக திணறி வருவதாக தேமுதிக மாநில துணைச் செயலாளர் சுதீஷ் தெரிவித்தார்.

சிறந்த தலைமை இல்லாததால் அதிமுக திணறி வருவதாக தேமுதிக மாநில துணைச் செயலாளர் சுதீஷ் தெரிவித்தார்.
ராயக்கோட்டையில் தேமுதிக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்ட அவைத் தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார். ஒன்றியச் செயலாளர் ஆர்.சீனிவாசன் வரவேற்றார். மாவட்ட பொறுப்பாளர் வழக்குரைஞர் எஸ்.எம். முருகேசன், மாவட்ட பொருளாளர் ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
கூட்டத்தில் கலந்து கொண்ட தேமுதிக மாநில துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ் பேசியது:
மக்களையும், தெய்வத்தையும் நம்பி தேர்தல் களத்தில் இறங்கும் ஒரே தலைவர் விஜயகாந்த் மட்டும்தான். 
அதிமுக நல்ல தலைமை இல்லாமல் திண்டாடுகிறது. வரும் தேர்தலில் அதிகபடியான இடங்களில் வென்று விஜயகாந்த் முதல்வர் ஆவார். எனவே, தேமுதிக தொண்டர்கள் இப்போதே களப்பணியாற்ற வேண்டும்.
இக் கூட்டத்தில் தேமுதிக அவைத் தலைவர் மோகன்ராஜ், பொருளாளர் இளங்கோவன், துணைச் செயலாளர்கள் பார்த்தசாரதி, அக்பர், விசாரணை குழு உறுப்பினர் அழகர் ஆகியோர் பங்கேற்று பேசினர். பின்னர் 6 சட்டப்பேரவைத் தொகுதிக்கும் தனித்தனியாக ஆய்வுக் கூட்டம் நடத்தினர். 
முன்னாள் மாவட்ட செயலாளர் சந்திரன், முன்னாள் மாநில இளைஞரணி துணை செயலாளர் அன்பரசன், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் சதீஷ், கிருஷ்ணகிரி நகரச் செயலாளர் பரந்தாமன் உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். முடிவில், கெலமங்கலம் பேரூர் செயலாளர் முருகேசன் நன்றி கூறினார்.
பின்னர், கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி அருகில் உள்ள செங்கல்தோப்பு தர்காவில் நடந்த சிறப்பு வழிபாட்டில் துணை செயலாளர் சுதீஷ் தலைமையில் நிர்வாகிகள் பங்கேற்று, விஜயகாந்த் பூரண நலம்  பெற வேண்டி பிரார்த்தனை செய்தனர். இதில்  ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com