விதைகளுக்கென புதிய செயலி அறிமுகம்

தரமான விதைகள் விற்பனை செய்யும் நிலையங்களைத் தெரிந்துக் கொள்ள பிரத்யேக செல்லிடப்பேசி செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தரமான விதைகள் விற்பனை செய்யும் நிலையங்களைத் தெரிந்துக் கொள்ள பிரத்யேக செல்லிடப்பேசி செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தருமபுரி விதை ஆய்வு துணை இயக்குநர் ராஜேந்திரன் தெரிவித்தாதவது:
விவசாயிகளுக்கு தற்போது விதைகளுக்கான புதிய செயலி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து உரிமம் பெற்ற விதை விற்பனை நிலையங்கள்,  நாற்றுப்பண்ணை விற்பனையாளர்கள் தங்களுடைய விதைகள் இருப்பு குறித்த விவரங்களை ரகம் வாரியாக பிரதி வாரம் வெள்ளிக்கிழமை அன்று இந்த விதை செயலியில் பதிவு செய்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாயிகள் தங்களுக்குத் தேவையான நல்ல தரமான விதைகளை அருகில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையத்திலும், தனியார் விதை விற்பனை நிலையங்களிலும் உரிய காலத்தில் பெற்று பயனடையலாம்.
பதிவு செய்ய தவறும் பட்சத்தில்  விதை விற்பனை நிலையங்களின் உரிமம் தாற்காலிகமாக ரத்து செய்யப்படும் என  விதை விநியோகஸ்தார்களுக்கு அறிவுறுத்தப்பட்டடுள்ளது.  இந்தக் கண்காணிப்புர் பணிகளை விதை ஆய்வாளர்கள் மா. சிவநதி, டாக்டர் வெ.தாமோதிரன் ஆகியோர் மேற்பார்வையிடுவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com