கூட்டுறவு சங்கத்தில் கடன் மோசடி: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

ராயக்கோட்டை தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாயிகள் பெயரில் போலியாக கடன் வழங்கி மோசடி செய்த

ராயக்கோட்டை தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாயிகள் பெயரில் போலியாக கடன் வழங்கி மோசடி செய்த பணியாளர்கள், நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  தமிழக விவசாயிகள் சங்கக் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழக விவசாயிகள் சங்கக் கிளை தொடக்க விழா மற்றும் விவசாயிகள் சங்கக் கூட்டம் ராயக்கோட்டை அருகேயுள்ள  உடையாண்டஅள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட துணைத் தலைவர் கண்ணன் தலைமை வகித்தார். கிளைத் தலைவர் சண்முகம்  வரவேற்றுப் பேசினார். கிளை துணைத் தலைவர் கோவிந்தராஜ்,  செயலர் கோவிந்தராஜ்,  துணைச் செயலர் முருகேசன், பொருளாளர் திருமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் கே.எம். ராமகவுண்டர் விவசாயிகள் சங்கக் கொடியை ஏற்றி வைத்து பேசினார்.
 உடையாண்டஅள்ளி அரசு புறம்போக்கு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிட வேண்டும்.  ராயக்கோட்டை தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தில் போலியாக விவசாயிகள் பெயரில் கடன் எழுதி மோசடி செய்த பணியாளர்கள், நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். 
விவசாய நிலங்களுக்கு பட்டா வழங்க வேண்டும். விவசாய விளை பொருள்களை எடுத்து செல்ல,  ஆக்கிரமிப்புகளை அகற்றிப் பாதை ஏற்படுத்தி தர வேண்டும். உடையாண்டஅள்ளி அருகில் கருப்பு கல் குவாரி அமைத்து, சட்ட விரோதமாக 400 அடி ஆழத்தில் கற்கள் வெட்டி எடுக்கப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, அருகில் உள்ள ஆழ்துளைக் கிணறுகளுக்கும், வீடுகளுக்கும் குடிநீர் பாதிப்பு ஏற்படுகிறது. மேலும் கிரானைட் குவாரிகளால் புகை மண்டலம் ஏற்பட்டு, மாசு ஏற்படுகிறது.
 அதை உடனடியாகத் தடை செய்ய வேண்டும். தென்பெண்ணை ஆற்று நீரை உடையாண்டஅள்ளிக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாய விளை பொருள்களை நாசம் செய்யும் காட்டுப் பன்றிகளை சுட அனுமதிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் மேற்கு மாவட்டச் செயலர் ராஜா, துணைச் செயலர் வெங்கடேசன், பொருளாளர் அசோக்குமார், மாவட்ட துணைத் தலைவர் கோவிந்தராஜ், ஒன்றியத் தலைவர் தணிகாசலம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com